உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

251

செய்கின்றனர்! இவ்வாறு இவர்கள் நிகழ்கால நிகழ்ச்சி களிலேயும் மெய்யொடு திறம்பிப் பொய்படுமறிவின ராயிருக்கக் க்கக் காண்டலின், இவர்களது அறிவை அறிவை உண்மை நிலையினதென் றுரைக்க மெய்யறிவு வாய்ந்தார் ஒருப்படுவரோ சொன்மின்கள்!

இனி, இங்ஙனங் கடந்த கால நிகழ்ச்சிகளிலும் நிகழ் கால நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்துப் பிழைபடும் அறிவுடை இவர்கள்,புலனுணர்வு மனனுணர்வுக்கு எட்டாத வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து நடத்தல் யாங்ஙனங் கைகூடும்? நாம் நெடுங்காலம் உயிர்வாழ்ந்து இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போமென்று எண்ணிக் கொண்ட எத்தனை பேர் ஏழையெளியவர்கள் வயிற்றை யொடுக்கிச் சேர்த்த பொருளை அவர் கண்ணீர் சிந்தக் கைப்பற்றிக் கொண்டு வந்த அந்நேரத் திலேயே சடுதியில் உயிர் துறந்து பிணமாய்க் கிடக்கக் கண்டதில்லையா? தமக்கு மேல் வலிமையுடையவர் களில்லை துன்புறுத்தி

யென்று இறுமாந்து

வலியற்றவர்களைத்

வந்தவர்கள் தாம் தம்மினும் வலியாரால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கவில்லையா? எத்தனை செல்வர்கள் எத்தனை அரசர்கள் எத்தனை மறவர்கள் தமது நிலையாமையை உணர்ந்து பாராமையால், நாளைக்கு நமது நிலைமை யெப்படியாமோ என்று ஐயுறவு கொள்ளாமற் பிறர்க்குத் தீங்கிழைத்துப் பின்னர்த்தாம் இருந்த இடமுந் தெரியாமல் இறந்து போகின்றனர், வருங்கால வியல்பை உணர்ந்து பார்க்க மாட்டாத நம்மக்களறிவும் அறிவெனப் படுமா? தன் உடம்பினுள்ளுந் தன்னைச்சுற்றிலும் நிகழப் போவன வற்றையே யறிய மாட்டாதான் ஒருவன், தான் ஒருவனே பல்லாண்டு நீடு வாழ்வன் ஏனையோ ரெல்லாம் நீடுவாழார் என நினைந்து பிறர்க்கு முன் தானேமாய்ந்து ஏமாற்றம் அடைவனாயிற் சிற்றறிவுடைய இம்மகனறிவு உண்மையை யுள்ளபடி யுணரவல்ல உண்மையுடையதாமோ? மக்களின் ச் சிற்றறிவுப் பெற்றி தேற்றுதற் கன்றோ ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/276&oldid=1591246" இலிருந்து மீள்விக்கப்பட்டது