உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

❖ ❖ மறைமலையம் – 27

அறிந்தும் அறிவதே யாயும்அறியா

தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த

தெதுவறிவும் அன்றாகும் மெய்கண்டான் ஒன்றின்

அதுவதுதான் என்னும்அகம்

என்று அருளிச் செய்தார், பிற் காலத்தில் தாயுமான அடிகளும்,

இனியே தெமக்குன் அருள்வருமோ வெனக்கருதி

ஏங்குதென் நெஞ்சம் ஐயோ

இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று

எண்ணவோ திடம் இல்லையே

என்று அருளிச் செய்தமை

காண்மின்கள்!

ங்ஙன மெல்லாஞ் செல்கால, நிகழ்கால, வருங்கால நிலைகளை உணரும் உண்மை யறிவு வாயாமையால்,மக்களும் மற்றை யுயிர்களும் இயற்கை யுண்மை நிலையுடைய வாகாமை தெற்றென விளங்காநிற்கும்,.

துகாறும் ஆராய்ந்தவாற்றால் உயிரில் பொருள் களும் உயிருள் பொருள்களும் இயற்கையிலேயே உண்மை நிலை யுடையவல்லாமைநன்கு பெறப்படுதலால், உயிர்கள் தாமுந்தம்மை ஓர் அறிவுடைப் பொருளென்று தமதுண்மை உணர்தற்குந் தமக்கு உடம்பும் உலகமும் உலகத்துப் பல் பொருள்களுமாகத் திரிபெய்திப் பயன்படும் மாயையென்று ஒரு பொருள் உண்டு என்று அதன் உண்மையினை அவைகள் அறிதற்குங், கடவுள் என்று ஒரு முழுமுதற்பொருள் என்றும் மாறா இயற்கை உண்மையுடையதாய் அவை இரண்ட னை யுந் தொடர்பு படுத்துதற்கு வேண்டுமென்பது இன்றியமை ம யாது பெறப்படும், என்னை? தன்னிலே மாறா உண்மை நிலையில்லா ஒருவன் பிறர்க்கு ஏதொரு நன்மையுஞ் மாட்டாமை நமது உலக வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழக்காண்டும் அன்றோ? தன் மனக்கினிய நண்பன் பட்ட கடனை நாளை வந்துதீர்த்து அவனைச் சிறைபுகாமற் காப்பேன் என்று உறுதி சொல்லிப் போன ஒரு செல்வன் தான் சொன்ன மொழியுந் தன் நினைவும் மாறிவிடுவனா யின்,

சய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/277&oldid=1591247" இலிருந்து மீள்விக்கப்பட்டது