உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

253

தொழிதல்

அவன் அவற்கு அவ்வுதவியைச் சய்யா போலவும், வெப்பு நோயால் வருந்து மொருவனுக்கு அந்நோய் தீர்க்க வந்த மருத்துவன் ஒருவன் நாளை விழுமிய தொரு மருந்து கொணர்ந்தூட்டி அதனைத் தீர்ப்பேனெனச் சொல்லிப் போய் மறுநாளில் அங்ஙனமே வந்து செய்யா தொழியின் அவன் அவற்குச் சிறிதும் பயன்படாமை போலவும், ஒரு கொடியனால் துன்புறுத்தப்பட்டு நடுநிலை மன்றத்தில் முறையிட்டான் ஒருவனுக்கு முறை செய்யப் புகுந்த ஒரு நடுவன் தன்கடமையினின்றும் வழீஇத், துன்புறுத்திய கொடியன்பாற் கைக்கூலி வாங்கிக் கொண்டு முறை செய்யாது மாறுவனாயின் அவன் தன்பால் முறை வேண்டினானுக்கு முறை செய்யாது குறை செய்தல் போலவும்

றைவனும் மாறுந்தகையனாயின், அவன் உயிர் களுக்கு ஏதோரு நன்மையுஞ் செய்ய மாட்டாநிலை யினனாய் விடுவன்.

மற்று, அவன் எண்ணிறந்த வுயிர்களுக்கும் அவ்வவற் றின் அறிவு நிலைக்கேற்ப எண்ணிறந்த உடம்புகளைக் கொடுத்து அவற்றின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்து வருதலையும், அவற்றின் அறிவு விளக்கத்திற்கு இன்றி யமையாத வெயில் மண்டில, நில மண்டில இயக்கங்களைச் சிறிதும் மாறாமல் நிகழச் செய்து வருதலையும் அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத புற்பூண்டுமரஞ் செடி கொடிகளை மாறாமல் விளைவித்து அவை காய், கனி, கிழங்கு, வித்துக், கீரை முதலான பயன்களைத் தொடர் பாகத் தருமாறு உதவி வருதலையும் மழை பெய்யுங் காலத்து மழை பெய்யவும் அதற்குக் கருவியான குளிர்ங்காற்று வேண்டுங் காலத்து அக் குளிர்ங்காற்று வீசவும், மழைக்கு முதலான நீராவி எழுதற்கு வெயில் மிகுங்காலத்து வெயில் மிகுந்து எறிப்பவும் மாறாமற் புரிந்து வருதலையும், இவ்வாற்றால் எல்லாவுயிர்களும் உணவு பெற்று அவற்றை யுட் கொண்ட பின் அகத்திருந்து அவ்வுணவைச் சாறுஞ் சக்கையுமாகப் பிரித்துச் சாற்றைச் செந்நீராக மாற்றி உடம்பெங்கும் ஓடச் செய்துஞ் சக்கையை உடம்பினின்று உடனுக்குடன் கழியச் செய்தும் நம் பெருமான் ஒரு நொடிப் பொழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/278&oldid=1591248" இலிருந்து மீள்விக்கப்பட்டது