உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

❖ ❖ மறைமலையம் – 27

மடிந்திராதுபேருதவி யாற்றி வருதலையும், அவன் அமைத்த மாறாநிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் நமது வாழ்க்கையினை

நாம்

செலுத்தத் தெரியாமல் அறியாமை யினாலும் றுமாப்பினாலும் தீய இன்ப வேட்கையினாலும் நமது உடம்பை நாமே சிதைத்து விட்ட விடத்து அதனை யொழித்துநமக்கு வேறு புதிய உடம்புகளைக் கொடுத்து நம்மை வேறு வேறு புதிய பிறவிகளில் உய்த்து வருதலையும் நாம் நன்காராய்ந்து ஆழ்ந்து நினையுங்கால், எல்லாம் வல்ல நம் ஆண்டவன் ஒருவனே எக்காலத்தும் எவ்விடத்தும் மாறா, உண்மைநிலை யுடையனா யிருக்கின்றன னென்பதூஉம், அவன் ஒருவனே எல்லா உயிர்களிடத்தும் - அவை எத்துணை இழிந்தன வாயினும் எத்துணை உயர்ந்தவனவாயினும், அவற்றின் பாலெல்லாம் மாறா அன்பினனாய் மாறா அருளினனாய் இருக்கின்றன னென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிப் போற் றெள்ளத் தெளிய விளங்குகின்றன வல்லவோ? ஆகையால், இயற்கை யுண்மை வாய்ந்தவன் இறைவன் ஒருவனே யல்லாமல் மற்றைய அல்லவென்று மேலைத்திருப்பாட்டில் அடிகளார் அறிவுறுத்தினமை சாலப் பொருத்த முடைத்தாதல் கண்டு கொள்ளப்படும்,

இனி, இவ் வுலகத்தின்கண் உள்ள சிற்றுயிர்களெல்லாம் ஒரே தன்மைத்தாக மாறாதுவிளங்கும்அறிவு வாய்ந்தவை அல்லவென்பது முன்னரே காட்டப்பட்டமையால் அவ் வுயிர்களெல்லாவற்றிற்கும் வேண்டுவனவெல்லாம் அறிந்து உதவி செய்தற்கு என்றும் ஒரு பெற்றித்தாய் வயங்காநின்ற பேரறிவு வாய்ந்த முதல்வன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது முடிக்கப்படும். எத்தனையோ உயிர்கள் புதிது தோன்றுவனவாயும் எத்தனையோ உயிர்கள் இறந்து படுபவனவாயும்எத்தனையோ உயிர்கள் வேறு பிறவிகளிற் செல்வனவாயும் உயிர்களின் தோற்றக்கேடுகள் டை யறாது எங்கும்நிகழக் காண்டலின், அவ்வவ்வுயிர் களின் அகத்தும் புறத்துமிருந்து அவ்வவ்வற்றின் தோற்றக் கேடுகளை யறிந்து அவ்வவ்வற்றிற்குப் பிறரெவராலுஞ் செய்ய முடியாத பேருதவியைச் செய்யும் பெருமான் அறிவு, எத்துணைப் பெரியதாய் எத்துணை விழுமிய விளக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/279&oldid=1591249" இலிருந்து மீள்விக்கப்பட்டது