உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

நி

255

தக்கதாய் எத்துணை அருளிரக்கம் வாய்ந்ததாய் எத்துணைச் சிறந்தமாறா நிலையினதாய் மிளிர்வதாகல் வேண்டும்! பசித்து உணவு வேண்டி வந்தார்க்கு உணவு கொடுக்கும் ஒருவன், ஓரிடத்தில் ஒருகாலத்துள்ளார் சிலர்க்கு மட்டுமே உணவு கொடுக்க வல்லனாவன்; தெற்கே குமரியிற் பசித்த பலர்க்கும், இடையே சென்னை சன்னை வேங்கடம் முதலான ஊர்களிற் பசித்துள்ளார் பலர்க்கும், வடக்கே காசி அவந்தி முதலான ஊர்களிற் பசித்தார் பலர்க்கும் அவன் ஒருவ ஒருவனே ஒரே காலத்தில் உணவளிக்க மாட்டுவனோ? மாட்டானன்றே? ஒன்றை விட்டு ஒன்று மிக அகன்றிருக்கும் அவ்வவ்வூர் களிலுள்ள வறிஞர்க்கெல்லாம் அங்ஙனம் அவன் ஒரே காலத்தில் உணவளிக்க வேண்டின், ஆங்காங்கு உணவமைப் பார் பற்பலரை நிறுவிப் பெரும் பொருள் செலவிட்டு அவர் வாயிலாக அங்ஙனஞ் செய்யலாமேயன்றித்தான் ஒருவ னாகவே யிருந்துஅங்ஙனஞ் செய்யமாட்டுவான் அல்லன்!

இங்ஙனமே நோய்கொண்டு வருந்துவார்க்கு நோய் தீர்க்கு மருத்துவனும், ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு சிலர்க்கு மட்டுமே நோய் தீர்க்கமாட்டுவானன்றி, ஒன்றினொன்று அகன்றிருக்கும் பற்பல ஊரிலுள்ள பற்பலர்க்கும் ஒ ஒரே காலத்தில் நோய் நீக்கமாட்டுவனல்லன்; அன்றி அவன் அங்ஙனஞ் செய்யவேண்டிற் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவர் பற்பலரை ஆங்காங்கு ஏவியே நோய் கொண்டார் பல்லாயிரவர்க்கும் மருந்தூட்டி நோய் தீர்க்கற் பாலன், மற்று, எல்லாம் வல்ல, கடவுளோ ஓரிடத்தன்றி ஓரூரிலன்றி ஓருலகத்தன்றிப் பல்வேறிடங்களிலும் பல்வேறு ஊர்களிலும் பல்வேறு உலகங்களிலும் நிறைந்து ஆற்று மணலிலும் அளவிடப் ப்படாதனவாய் உள்ள உயிர்த் தாகைளில் எத்தனை கோடியுயிர்களை ரே காலத்தில் தோற்று விக்கின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடியுயிர்களை ஒரே காலத்தில் ஒரு ஒரு பிறவியினின்று விடுவித்து வேறு பல பிறவிகளில் உய்த்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்தில் தன் திருவடிப்பேரின்பத்திற் படிவித்துவருகின்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/280&oldid=1591250" இலிருந்து மீள்விக்கப்பட்டது