உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

❖ ✰ மறைமலையம் – 27

ங்ஙனமாக எல்லாஇடங்களிலும் எல்லாக் காலங் களிலுந் தான் ஒருவனாகவே யிருந்து, எல்லா உயிர்களின் இயல்புகளையும் அறிந்து அவ்வவற்றிற்கேற்ற உதவிகளைத் தான் ஒருவனாகவே செய்துவரும் இறைவன்றன் அறி வாற்றல் எவ்வளவு சிறந்ததாய், எவ்வளவு பேரள வினதாய் இருக்க வேண்டு மென்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! த்துணைச் சிறந்த அவனறிவு, நம்மனோர்க் குள்ள அறிவுபோல் ஆணவ வல்லிருளில் மறைந்து இருந்து, பின் அதனின்றும் விடுபட்டு விளங்குவதாயிருக்கக்கூடுமோ என்பதையும் எண்ணிப் பாருங்கள்! பாருங்கள்! அவனறிவு அவனறிவு சிறிது மறைந்திருந்தால் இவ்வுலக மெங்கே, இவ்வுலகத்துள்ள பண்டங்களெங்கே, புற் பூண்டுகள் எங்கே, பல்வகைப் பிறவிகளெங்கே, பல்வகை யுயிர்களெங்கே, ஞாயிறு திங்களெங்கே, எல்லாம் வெறும் பாழாய் வெட்ட வெளியா யிருக்குமல்லவோ? ஆதலால் எல்லாம் வல்ல இறைவனறிவு, நமதறிவு போல் ஆணவ வல்லிருளிற் சிறிதும் மறையாதாய், என்றும் விளங்கின படியாயே யிருக்கும் என்பது சிறிதும் ஐயமின்றித் தெளியற்பாலதாகும், இதுபற்றியே அடிகளார் அவன் இயற்கை யறிவினனாயே யிருப்பன் என்று மேலைத் திருப்பாட்டில் அருளிச் செய்தாரென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

.

6

னி, இறைவன் இயற்கையுண்மையினனாயும் இயற்கை யறிவினனாயும்மட்டுமே இருப்பனென்று உரைப் பின், வ்விரண்டு இலக்கணங்களும் மாயை ஆணவங் களுக்கும், மாயை ஆணவங்களினின்றும் விடுபட்ட உயிர் களுக்கும் முறையே பொருந்துவான் செல்லும், என்னை? உடம்பாயும்

உடம்பின் கரு விகளாயும் உலகங்களாயும் த உலகத்துப்

பொருள்களாயுந் திரிபுறாத மாயையின் பரப்பு இன்னும் எவ்வளவோ பெரிதாய் இருக்கின்றது! இந்நால் வகைக் காரியப் பொருள்களாய்த் திரிந்த மாயையின் பகுதி சிறிதாயும், அங்ஙனந் திரியாத பகுதி பெரிதாயும், உள வென்பது ஆராய்ச்சியால் நன்கு புலனாதலின், திரிபில்லாத அதன் முதற்காரணப் பகுதி இயற்கை யுண்மை நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/281&oldid=1591251" இலிருந்து மீள்விக்கப்பட்டது