உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

யுடையதாதல் தானே பெறப்படு மன்றோ?

257

ங்ஙனமே,

பிறவிக்கு வாராத உயிர்களும் உயிர்களும் இன்னும் எத்தனையோ கோடிக் கணக்காய் உள்ளனவாகலின் உள்ளனவாகலின் அவை தம்மைப் பற்றியிருக்கும் ஆணவமலமுங் காரியப் படாததாய் இயற்கை யுண்மைநிலை வாய்ந்ததாதலுந் தானே பெறப்படுமன்றோ?

வை போலவே சதா சிவ தத்துவத்தில் வைகுஞ் சதாசிவர் முதலாயினார் இயற்கையிலேயே ஆணவமலப் பற்றுப் பெரிதும் அகன்றவராய், இயல்பாகவே பேரறிவு விளக்கம் வாய்ந்தவராய் இருத்தலின், அன்னார்க்குள்ள அவ்வறிவு இயற்கையே யுண்மை நிலையுடையதாதலுந் தானே

பெறப்படும்; பெறப்படவே இறைவன் ஒருவனே இயற்கை யுண்மையினனாயும் இயற்கையறிவினனாயும் விளங்குவ னென்ற சொற் குற்றமுடைத்தாய் முடியுமாம் பிறவெனின்; அற்றன்று, அக்குற்றம் அணுகாமைப் பொருட்டே “இயல் உண்மை யறிவு" என்றவளவில் அமையாது, “இன்பம்” என்ப தொன்று கூட்டி, "இயல்" உண்மை அறிவு இன்பவடிவாகி என்று ஓதி, இறைவன் வரம்பிலின்ப வடிவின னாய் நிற்றல் அவற்குச் சிறந்த லக்கணமாதல் அடிகள் புலப்பட

வைத்தார்.

அஃதொக்குமா றென்னை? L மாயையிற் றிரண்ட பண்டங்களிற் பல ன் சுவையினவாயும், வேறுபல நறுமணத்தின வாயும், மற்றும் பல இன்னோசையினவாயும், இன்னும் பல அழகிய தோற்றத்தினவாயும், பின்னும் பல இனிய மென்மையினவாயும், புகுந்து உயிர்கள் பால் இன்பத்தை விளைக்கக் காண்டலின், மாயையும் இன்ப முடைத்தென்பது போதருமாலோ வெனின் அஃதொவ்வாது; என்னை? மாயையிற் றிரண்ட பண்டங்கள் அறிவுடைய உயிர்கள் மாட்டுஇன்ப துன்பங்களை விளைவித்தற்கு கருவியா மல்லது, அவைதாமே இன்ப துன்பங்கள் உடையவல்லவா கலின், மாயை அறிவில் பொருளாதல் கண் கூடாக அறியக் கிடத்தலின், அதுதானே தனக்கு இன்ப முண் ன்றாதல் துன்பமுண்டென்றாதல் அறிதல் செய்யாது, கனிந்த பலாச்சுளையைத் தேனோடு கூட்டி யுண்டவனுக்கு அதன் ன்சுவையினால் இன்பம் மீதூரக் காண்டுமேயன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/282&oldid=1591252" இலிருந்து மீள்விக்கப்பட்டது