உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

❖ ❖ மறைமலையம் – 27

கண் விளங்கக் கொண்டு பெரும் பிரகாசமாய் நின்றவாறு போல, ஐந்துமலக் கொத்தின் வயப்பட்டுப் பெத்த தசையில் அவற்றின் சொரூப மாய் நின்ற ஆன்மாவானது, முத்தி தசையில் அவற்றினின்று முழுவதுங் கழன்று சிவசூரிய சந்நிதானத்தினின்று அச்சிவசூரிய அருளொளிவயமாயே நிற்கு மென்றுணர்க.

66

""

இனித் தனாதிமலங்கெட என்றது மேற் சொன்ன வாறு ஆன்மாத்தானவனாய் நிற்பவே தன் வலிமடங்கி நின்ற ஆணவ மலமானது பின் தலை யெடாமலே யொழியுமென் றறிவித்தது. ஆன்மா முத்தி யடைந்த பின் அதனைப் பந்தித்த ஆணவ முதலிய மலங்கள் சூனியமாமோவெனின்; - அங்ஙனங் கூறுதல் சற்காரிய வாதங் கொண்ட சைவசித்தாந்தத்திற்கு ஏலாமையின், எல்லாப் பொருளுக்குந் தாரகமாய் நின்ற இறைவனே ஆண்டு ஆணவ மலத்திற்குங்களை யிருப்பனென்க. அற்றேல், அதனால் அவன் துடக்குறுவனோ வெனின்; - துடக்குறுவானுமல்லன். ஒருவன் வயிற்றகத்தே கிடந்த புழுக்களுக்கு உண்டாகுங் குணங் குறி வேறுபாடுகள் அவனைச் சென்று தாக்காமைபோல ஆணவவலி யிறை வனைத் துடக்கமாட்டா தென்க; இஃது

“உன்னுதரத்தேகிடந்த கீடமுறுவதெல்லா முன்னுடைய தென்னாநீ யுற்றனையோ - மன்னுயிர்க எவ்வகையே காணிங் கழிவதுவு மாவதுவுஞ்

செவ்வகையே நின்ற சிவன்பால்

و,

என்னுந் திருக்களிற்றுப்படி யாரினுங்காண்க.

கணா

இனித் “தத்துவாதீதம் வினாவு நீர் பாலாதல் வேதாந்த வுண்மையே” என்றது தத்துவங்களுக்கு அப்பாற் பட்டதாய்த் தானவனாய் நிற்கும் நிலையை உணர்த்தியது. நீர் பாலோடு கூடிய வழி அப்பாலி னுருவாய்த் தன்னுருவு சிறிதுங் காட்டாமல் அப்பாலோ டொருமைப்பட்டு நிற்றல் போல உயிர் முதல்வ னருளோடு ஒருமைப்பட்டுத் தானது வாய் நின்ற வழித் தனக்கென வேறோ ருருவின்றி அவ்வரு ளுருவே தன்னுருவாய் வயங்கத் தானொரு பொருளுண் டென்பதூஉம் அறியப்படா வாறு நிற்கும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/299&oldid=1591269" இலிருந்து மீள்விக்கப்பட்டது