உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

275

எனவே, சீவன் தன்னைப் பொதிந்த ஆணவ மல வலியை அடக்கித் தன்னைத் தத்துவங்களின் வேறாய்க் கண்டு சிவனே தானாய் நிற்றலே வேதாந்த முடிபா மென்பது சிவானந் தானுபவ சிரேட்ட குரு மணியான திருமூலர் திருவாக்கால் னிது பெறக் கிடக்கின்றது. உபநிடதங்களின் முடிபாய் வலியுறுத்து உரைக்கப்பட்ட 'அகம்ப்ரஹ் 'தத்துவமஸி' என்றற் றொடக்கத்து மகா வாக்கியங்களும் தனையே வற்புறுத்துகின்றன. இன்னு மிதனை.

"அதுவிதுவென்று மவனானே யென்று

மதுநீயே யாகின்றா யென்றும் - அதுவானே னென்றுந் தமை யுணர்ந்தா ரெல்லா மிரண்டாக வொன்றாகச் சொல்வரோ வுற்று"

மாஸ்மி

என்னுந் திருக்களிற்றுப் படியார் திருவாக்காற் காண்க.

இங்ஙனம் மகா வாக்கியங்களாற் சிவோகம் பாவனை உணர்த்திய உபநிடத முடிபையே வேதாந்த மென்று மெய்ப்பொருளறிந்தார் உரையாநிற்ப, இம்மெய்ப்பொரு ளறியமாட்டாத பொய்ப்பொருளுடைய ஒருசாரார் இம்மா வாக்கிய மெய்ப்பொருளைப் பிறழ வத்து 'நான் அவனானேன்' என்றமையானே பிரமம் என்றும் நான் என்றும் இரண்டு பொருளில்லை, அப்பிரமமே நான், கட்புலனாய்த் தோன்றும் இவ்வுலகமும் மற்றையவும் இல்லாத சூனியப் பொருள்களே யாமென்று தாமறிந்த வாறெல்லாம் போய்ப் போலி வேதாந்த மொன்றுகட்டினார். இவர் கூறும் இப்போலி வேதாந்தம் வேதாகம புராணேதிகாச சிஷ்

ாசார

முழுவதற்கும் முற்றும் விருத்தமாமென்பதனை யாமுணர்த்தல் அவசிய மன்றாயினும் ஒருசிறிது காட்டுதும். சுவேதாசுவ தரோப நிடதத்து.

என்னும் மந்திரத்தால் பரமான்மா சீவான்மா இரண்டி னிருப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/300&oldid=1591270" இலிருந்து மீள்விக்கப்பட்டது