உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

❖ ❖ மறைமலையம் – 27

என்னும் மந்திரத்தால் அவ்விருவகைச் சைதன்னிய இருப் போடு சீவான்மாக்கள் அனந்தமுள்ளன வென்பதும், என்னும் மந்திரத்தாற்சத்துவ இராசத தாமதகுண ஸ்வரூப மானமாயை என்று முள்ள தென்பதும் வலியுறுத்தப் பட்டமை காண்க. இன்னும் பிருகதாருணியத்தில்

" నై వెహకించనాగ్రఆసీన్మృత్యు'

66

என்னும் மந்திரமானது இங்கு முன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை; ஈதுண்மையே சுருக்கு மியல்பு டைய மிருத்யுவால் விழுங்கப்பட்டிருந்தது”. என்று சிருஷ்டி யாரம்பத்திற்கு முன் ஆன்மா ஆணவ சையோக முற்றுக் கிடந்த அனாதி நிலையை னிது விளக்கிற்று. இதில் இங்குமுன் ஏதொரு பொருளு மிருந்ததில்லை.' என்றது னாதியில் தூலகாரியமாக விளங்கும் இப் பிரபஞ்சம் ருந்ததில்லை யன அறிவிப்பதாயிற்று. அப்போது

ன்மாவின் வியாபக ஞானத்தைச் சுருக்குமியல் புடைய ஆணவம் அதனை விழுங்கி யிருந்தது. அவ்வாணவம் ஆன்ம அறிவை இறக்கச்செய்யும் அல்லது விளங்க வொட்டாது செய்யும் இயல்புடைத்தாதல் பற்றி ‘ம்ருத்யு' என்னும் பெயராற் சொல்லப்பட்டது. இன்னும் ம் இவ்வாறே உபநிடதங்களில் ஆண்டாண்டு இவ்வுண்மைகளை இனிது நிறுவி விளக்கிய மந்திரங்களை எடுத்துக் காட்டலுறின் இவ்வுபந்நியாசம் மிக விரியுமென வஞ்சி விடுக்கின்றாம். ஆகையால், போலி வேதாந்திகள் சொல்லும் பொருளுக்குப் பிரமாணம் உபநிடதங்களில் பெறப்படாமையால், அவர் கொள்கை வேதாந்த பாகியம் என ஒழித்து மேலே செல்வாம்

என்க.

இனிச் சித்தாந்தமாவது என்னையோவெனின்; அதனையும் மெய்ப்பொருட் குரவரான திருமூலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/301&oldid=1591271" இலிருந்து மீள்விக்கப்பட்டது