உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

“நித்தம் பரனோ டுயிருற்று நீண்மனஞ் சத்த முதலைந்துந் தத்துவந் தானீங்கிச் சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந்

தத்தன் பரன்பா லடைதல் சித்தாந்தமே'

277

என்றருளிய திருவாக்காற் றுணியலாம். 'மனம், சித்தம் புத்தி, அகங்காரம் முதலிய அந்தக் கரணங்களும் சத்தப் பரிச ரூபரஸ கந்தம் முதலிய தன் மாத்திரைகளும் மூலப் பிரகிருதியி லுண்டான ஏனைத் தத்துவங்களும் சுத்த மாயை அசுத்த மாயை முதலியனவு மெல்லாம் பற்றறக் கழித்து ஆணவ வலியை ஒடுக்கி ஒழிப்பதற் கேதுவான மேற்சொல்லிய சோகம் பாவனை வழி நின்று நித்தப் பொருளான சிவபெருமானுட னிரண்டறக் கலந்து ஒன்றா யொழிதலே சித்தாந்தமாகும்' என்பது இதன்கண் வலியுறுக்கப்பட்டமை காண்க. இச்செய்யுளில் ‘நினைந்து’ என்றது மேற்செய்யுளிற் கூறிய சோகம் பாவனையேயாம். இதனால், சித்தாந்தம் என்பது வேதாந்தத்திற்கும் அப்பாற் சென்ற முடிபாம். வேதாந்தம், சிவோகம், பாவனை வரையிற் சென்றது. சித்தாந்தம் அதற்கு மேலும் போய் நின்றது. சிவோகம் பாவனை வலியுறுத்தும் மாவாக்கிய உபநிடத முடிபால் அச்சிவோகம் பாவனையுள்ளும் ஆன்மாவில் நான் என்னும் உணர்வு நின்ற தென்பது தெற்றெனப் புலப்படும். நான் என்னும் உணர்வு மிடைநிகழச் சிவகோம்பாவனை செய்து நின்ற விடமே வேதாந்தமாம். அவ்வுணர்வுங் கெட்டுச் சிவமாய் நின்ற விடமே சித்தாந்தமாம். இவ்வியல்பை ன்னும் விளக்கமாக வைத்துத் திருமூலயோகிகள்

66

'தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த

மானா துரியத் தணுவன் றனைக்கண்டு தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமா யானா மலமற் றருஞ்சித்தி யாதலே'

وو

என்றருளிச் சய்த பெருங்கருணைத் திறத்தை யாதெனமொழிவேம்! “தானானவேதாந்தம்" என்பதனால் சிவவுணர்வும் தன்னுணர்வும் ஒருங்குபட்டு நின்ற சிவோகம் பாவனாநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. "தான் என்னுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/302&oldid=1591272" இலிருந்து மீள்விக்கப்பட்டது