உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

❖ ✰ மறைமலையம் – 27

கொன்ற மகற்கு" என்ற திருவாக்கையும் மறந்து சாமுவேல் சற்குணர் பீயே "கால்வெல் பிஷப்பும் திருநெல் வேலிச் சாணாரும்” எனப் பெயரிட்டுத் தாம் வெளிப்படுத்திய புஸ்தகத்திலே பிஷப்பையும் வேதவவையையும், நிந்தித்த நிந்தையையுங் கண்ட கேட்ட யாவரும் பாதிரிமாரிடத்தி லிருந்து இனிமையாகப் பணத்தை வாங்கி உண்டுவிட்டு அவர்மீது பத்திரபாணத்தை மீளச் செலுத்திய செய்ந்நன்றி கொன்றவர் சற்குணரே எனத் தூற்றாது விடார் களன்றோ?

ர்

போது

னே

திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துப் பிஷப்பவர்கள் எழுதியவவை யெல்லாந் தாமெழுதிய ஓர் புஸ்தக வாயிலாக மறுத்துவிட்டேனென்று தனது பந்துக்கள் சிநேகிதர் முதலாயின வரோடு புகழ்ந்து மகிழ்ந்து செருக்குற்றுத் திரியும் சற்குணரது போலி நியாயங்களனைத்தையும் நியாய வச்சிர தண்டங் கொண்டு புடைத்துத் தகர்ந்தெறிந்து விடுவாம். பிஷப்புத் திருநெல்வேலியை விடுவித்துத் தமது தேசத்துக்குப் போகு முன்னரேதானே சற்குணர் தாமெழுதி வெளிப்படுத் தாது அவர் போயபின்னரெழுதி வளிப்படுத்தினமை பிஷப்பு பிஷப்பு இங்கிருந்த வெளிப்படுத்திவிட்டால், அவர் ஓர்போது தாம் வெகு பணம் செலவிட்டுத் தொடங்கிய பிரயாணத்தை உ நிறுத்திவிட்டு அப்புஸ்தகத்துக்கு மறுப்பெழுதி விட்டால், தான் சிறிது காலமாயினும் தனது பெண்டு பிள்ளைகள் பந்து சிநேகர்களோடு தான் பொய்ப் புழுகுகளைப் பொறிந்து பொறித்த போலிப் புஸ்தகத்தைக் குறித்து மகிழும் மகிழ்ச்சி யொழிந்துவிடுமே யென்ற பயத்தி னாலேயோ, பிறிது காரணத்தினாலயோ தெரிந்திலது. நெடுங்காலமாகத் திருநெல்வேலி முதலிய இடங்களிலே யிருந்து தமிழ்ப்படிப்பி னாலுந் தமிழ்ச் சகவாசத்தாலுந் தமது அநுபவத்தினாலும் அநேக விஷயங்களை யறிந்து அநேக புஸ்தகங்களை ஆங்கிலேய பாஷையிலே வெளிப்படுத்தினவ ராகிய கால்டுவெல் பிஷப்பவர்கள் திருநெல் வேலிச் சாணாரைக்குறித்தெழுதிய புஸ்த கத்துக்குச் சற்குணர் மறுப்பெழுதத் தொடங்கினமை சிங்கத் தைப் பூனைக் குட்டியும், கீரியைச் சர்ப்பமும், சூரியனை மின் மினியும், எதிரத் துணிந்தமை போலாகுமன்றோ? பிஷப்புத் தாம்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/317&oldid=1591287" இலிருந்து மீள்விக்கப்பட்டது