உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

293

அச்சிட்ட அப் புஸ்த கத்தினாலேயே அவர் தமக்கு மதிப் பில்லை யெனவும் பிறர் தமக்குத் திருப்தியில்லை யெனவும் சற்குணர் சாற்றுகின்றார். இது முக்காலத்தினும் பொருந்தாது. என்னை? பிஷப்பு சாணா ரைப்பற்றி யெழுதியவை களெல்லாம் சுருதிக்கும் யுக்திக்கும் அநுபவத்துக்கும் எவ் வவ ரும் அங்கீகாரஞ்

ஒத்திருக்கின்றனவென்று செய்கின்றமையினால் பிஷப்புக்கு அதிக மதிப்பும் பிறர் தமக்கு அதிக ஆநந்தத்தையும் விளைவிக்க விளைவிக்கச், சற்குணர் வஞ்சித்தெழுதிய போலிப்புஸ்தகம் சாஸ்திர யுக்தி அநுபவங்களுக்குச் சிறிதாயினும் ஒவ்வாது கற்பனா வாசகங்கள் அடங்கியவென எவரும் சொல்லு கின்ற மையால் அந்தச் சற்குணர் எழுதியவைகள் துர்க்குண முடையன வென்று சொல்லவே, அவர் தமக்கு நிந்தையும் பிறர் தமக்கு நகைப்பையும் விளைவிக்கின்றன என்பதை அவர் தமது நெஞ்சிலே தட்டிக் கேட்டால் அது உண்மை பேசும்! பேசும்!

கு

பிஷப்பு தாம் எழுதிய புஸ்தகத்துக்குத் திருநெல்வேலிச் சாணாரெனப் பெயரிடுவது அடாதெனவும், அவர் அப்புஸ்தகம் எழுதியபோது இடையன் குடியிலே இருந்தா ரெனவும், இவர் சென்னபட்டணத்துக்குப் போக்குவரவு செய்த போது திருநெல் வேலிப் பெரிய தெருப்பாதையே யன்றித் திருநெல்வேலியின் வடக்குமறியார் மேற்குமறியார் எனவும், திருநெல்வேலிக்கு வடக்கிலுள்ள சாணார் வியாபாரம் நடாத்தும் யூகத்திலே எந்தச் சாதியாரிலும் உயர்வொப்பிலாதவரெனவும் பிஷப்பு சாணா ரைக் குறித்து மூடர் படிப்பில்லாதவர் என எழுதியவை பொய் எனவும், அவர் அப்புஸ்தகத்தைப் பிரசுரஞ்செய்தற்கு இருபத் தேழு வருஷங்களுக்கு முன்னேதானே சிவகாசியிலிருந்து கவர்ன் மெண்டு உத்தியோகஸ்தர் ஒருவர் சாணார் வியாபாரத் தினாலும் கீர்த்தியினாலும் நாடாள்கள் என்று சொல்லப் படுகின்றார்கள் எனவும், திருநெல்வேலியின் ஒருகாற் பங்கு தானும் இல்லாத அதன், தென்கிழக்கு மூலையிலிருக்கும் சாணார் நிலைமையை மாத்திரம் அறிந்துவிட்டு, அந்தப் பிஷப்பு அறியாமையும் துர்ப்போதனையும் மேற்கொண்டு விரைவில் இங்கிலாந்துக்குப் போய்ப் பொய் புகுத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/318&oldid=1591288" இலிருந்து மீள்விக்கப்பட்டது