உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

❖ ❖ மறைமலையம் – 27

புஸ்தகத்தை வரைந்து வெளியிட்டனர் எனவும் சொல்லிச் சற்குணர் உறுமுகின்றார்.

இந்தியாவிலே பிறந்தவர்கள் இங்கிலாந்தையாயினும் அமெரிக்காவையாயினும் சீனாவையாயினும் மலாக்காவை யாயினும் நேரே போய்ப்பாராது அவர்கள் தாந்தாமிருந்த டங்களிலிருந்து அவ்வத்தேச சரித்திரங்களைக் குறித்துத் தாங்கள் வைத்திருக்கும் புஸ்தக வாயிலாக அறிந்த அறிவும் புஸ்தகங்கள் மாத்திரத்தால் அறியக்கூடாதவைகளைப் படித் தவர்வாய்க் கேட்டல்வாயிலாக அறிந்த அறிவும், அவ்வாறு, இந்தியா இலங்கை முதலிய தேசங்களை நேரே அடைந்து பாராவிடினும் அவ்வத்தேச சமாச்சாரங்களை எல்லாம் பிறந்த இடமாகிய லண்டனிலிருந்தே வந்து அவ்வவை களுக்கு இசையச் சட்டங்கள் ஏற்படுத்திப் பரிபாலனஞ் செய்யும் இராணிய வர்கள் முதலாயினோர் அறிந்த அறிவும், பொய்யாகு மன்றோ? இவ்வாறு, ஒவ்வொருவனும் தன் தன் வீட்டிலே இருந்து பிறவீடுகளிலே நடக்கும் சங்கதிகளையும் தன்தன் தேசங்களிலும் பிறவிடங்களிலும் சம்பவிக்கும் சமாசாரங் களையும் அறிந்த அறிவும் பொய்யாகுமன்றோ? பனை, தென்னைமரம், மலை முதலியவற்றில் ஏறினாலும் அடைய வொண்ணாத சூரிய சந்திர கிரக நக்ஷத்திராதி களுடை ய தூரங்களையும் மற்றை விபரங் களையும் தூரதரிசி யந்திரம் முதலிய கருவிகளினாலே கணக்குப்பூட்டி அறிவைப் புகட்டும் வான சாஸ்திரங்களால் அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? பூமியின் உட்பாகத்திலே வெகுதூரத்தின்கண் மண்ணடுக்கு வகைகளையும் கல்லடுக்கு வகைகளையும் பிறவற்றையும் கூறும் பூமி விவரண சாஸ்தி ரத்தால் அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? கத்தி யினாலே நேரேநின்று பிரித்தறிய இயலாத காற்றைப் பிராணவாயு உப்பு வாயுக்களாகப் பிரிக்கும் இரசவாத யந்திரங்களும் உளவாம் என அறிந்த அறிவும் பொய்யாகு மன்றோ? இவ்வண்ணம் நேரேபோய்ப் பார்த்து அறியாத பொருள்களும் சமாசாரங் களும் பொய்யென்று சொல்ல நேரிடுமன்றோ? இவற்றை யோசியாது இடையன் குடியிலி ருந்து திருநெல்வேலி யிலுள்ள சாணாரைக்குறித்து இழி வாகப் பிஷப்பு எழுதினமை அப்பிஷப்பின் மௌட்டிகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/319&oldid=1591289" இலிருந்து மீள்விக்கப்பட்டது