உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

295

தனமென்று சாதிக்க முயன்ற சற்குணரை நோக்கி, நீரும் இக்காலத்திலே இருந்து உமது கண்ணும் காலும் எட்ட வொண்ணாத முற் காலத்திலே இருந்த க்ஷத்திரியர்தான் சாணாரென்றும், சாணார்தான் க்ஷத்திரிய ரென்றும் எழுதத்துணிவதற்கு நேரே நின்று பார்த்தீரோ என்ற வினாவினால் அவருடைய வாயை அடக்கி விடுவேம். இங்ஙனம் பார்த்தறியாது எழுதியவைகளை அநுபோகத்தி னாலும், யுக்தியினாலும், சாஸ்திரத்தினாலும் ஒத்தவைகளை எழுதக் கூடாதென்னும் வீண் வழக்கை விளைத்து, யூகத்தினாலே சாணாரச் சாதியை வென்ற சாதியார் இல்லை யென்று “பொரிமாவை மெய்ச்சினாளாம் பொக்கு வாய்ச்சி” என்ற பழமொழிப்படி தம்மைத் தாமே புழுகிக் கொள்ளுகின்ற சற்குணர் யூகம், மயூகம்! மயூகம்!!

க்

டையன்குடியிலிருந்து பிஷப்புத் திருநெல்வேலி வழியாகச் சென்னபட்டணத்துக்கு ஓர் முறையாயினும் ஓர் காலத்திலாயினும் போகாவிடினும் அவர் இடையன் குடியி லிருந்து திருநெல்வேலிச் சாணாரைப்பற்றி எழுதுவதற்கு அவருக்கு வன்மையில்லாமற் போவதற்குக் காரணம் என்னை? திருநெல்வேலிச் சாணாரைப்பற்றி எழுதுவதற்குத் திருநெல் வேலி வந்திருந்துதான் சாணாரைப்பார்த்து அறியவேண்டியது என்னை? இடை டையன் குடியிலும் பிறவிடங் களிலுமிருந்து திருநெல்வேலிச் சாணாரை நெடுங்காலம் அநுபோகத்தினாலே நீடிய வயதோடு இருந்து அறிந்து அக்காலத்திலே அவ்வூர்ச் சாணாரைக்குறித்து அவர் வெளிப்படுத்திய புஸ்தகத்தை இப்போது பிரவேசப் பரீஷை, பீயே பரீக்ஷைகளுக்குரிய பாடங்களை நெட்டுருச் செய்து படித்தலிலே தங்கால முழுமை யும் போக்கி அற்ப அறிவோடு அற்ப அநுபவத்தை மாத்திரம் உடைய இவரா இங்ஙனம் கண்டிக்க முயன்றார்? பிஷப்பு ஐரோப்பாவை விடுத்து இந்தியாவில் இறங்கிய நாண்முதலாகப், பதினான்கு வருஷம் நித்திரையின்றி இராமசுவாமிக்கு துணை யாக விழித்துக் கொண்டிருந்த இலக்குமணப் பெருமாளைப் போல, இந்தச்சற்குணரும் ஐம்பது வருஷகாலமாக அந்தப் பிஷப்பைப் பிரியாது இருந்தாலன்றி, பிஷப்புத் திருநெல் வேலியின் வடக்கு மேற்கு அறியாதவரென்று சொல்லத் துணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/320&oldid=1591290" இலிருந்து மீள்விக்கப்பட்டது