உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

யார்.

❖ ❖ மறைமலையம் – 27

ங்ஙனம் வடக்கு மேற்கு அறியாதவரென்று கோபிக்கின்ற சற்குணர், பிஷப்பை இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்களிலும் பிரியாதவர் என்பதும், இந்தச் சற்குணர் பிறப்பதற்கு முன்னே பிஷப்பு வந்திருந்தார் ஆதலினால் “கிறிஸ்துநாதர் பூமிக்கு வருவதற்கு முன்னும், குமாரனாகிய தாம் பிதாவாகிய யேகோவாவோடு இருந்தார்” என்று பைபிள் புஸ்தகம் சொல்வது போல, இந்தச் சற்குணரும் தாம் பிறத்தற்கு முன் தொட்டுத் தமது பிதாவாக உபசரிக்கப்படும் பிஷப்போடு இருந்தாரெனவும் பெறப்படும். பெறப்படவே, இதைக் கேட்கிற சிறு பிள்ளைகளும் நகையாடாது விடார்களன்றோ? ஓர் பொருளை ஓர் இடத்தில் ஒருவன் மற்றொரு வனுக்கு இருந்த தாகச் சொன்னால் கேட்டவன் அதை அவ்விட முழுமையுந் தானும் பிறருமாக நன்றாகப் பரிக்ஷித்துப் பார்த்த பின்னன்றோ அப்பொருள் அவ்விடத்தில் இல்லை யென்று சாதிக்கலாம். அதை விடுத்து ஒரே முறையிலே இல்லை யென்று சாதிப்பது எங்ஙனம்?

திருநெல்வேலியின் வடபகுதியினுள்ள சாணார் வியா பாரம் நடாத்தும் உபாயத்திலே ஓர் சாதியாரும் தமக்குச் சமமில்லாதவர் என்றும் இவர் புழுகுகின்றார். இதையும் இப்போது இவரே சொல்லக்கேட்டோம். சாதியார் என்றது இவர் எவரையோ? எந்தெந்தத் தேசங்களிலும் எந்தெந்தச் சாதியாருள்ளும் வியாபார முதலிய எவ்வெத் தொழிலிலும் யூகமுடையவர் உளர் என்று, பத்திரிகைகளும், புஸ்தகங்களும் பெரியவர்களும் சொல்லக்கேட்டும், பின் தமது பொய்ந் நிறைந்த வாயைப் பிளப்பது யாது காரணத்தினாலோ அறியேம். கோடா கோடி செல்வர்கள் அகண்ட ஐசுவரியத்தி னாலும் வியாபாரத்தினாலும் தேக்கெறிந்து சிறந்து விளங்கிக் கொண்டிருப்பவும், இதைக்கேட்டாயினும் அறியாது, அரசனை யடைந்திடா ரெனில் எவ்வெவ ராக்கமும் இனிது போலுமால் னிது போலுமால்" (இராசா வினது பெரிய செல்வத்தை ஒருவன் போய்ப் பாராதிருந்தால் அவன் தனது செல்வந்தான் எல்லோர் செல்வத்திலும் இனியது போலும் எனக் கருதுவான்) என்ற வாக்கியத்தினாலே தனது சாணா ரச்சாதியே எல்லாச் சாதியாரினும் வியாபார நடாத்து தலிற்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/321&oldid=1591291" இலிருந்து மீள்விக்கப்பட்டது