உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

297

சிறந்தது என்று புழுகிய பொய்வாசகம் பொடிபட்டு ஒழியும். சாஸ்திரப் பிரகாரம் வியாபாரத்திலே பொய்யு மெய்யும் உண்டு என்பதைச்

சாதாரணமாக

எவரும்

ஒத்துக்கொள்வர். மற்றச் சாதியார் எல்லாரும் பொய் பேசுதல் பாவம் என்பதை நினைந்து தாம் வாங்கிய பொருளை வாங்கியபடியே ஏறக்குறைய விற்றுத் தங்கள் வயிற்றை வளர்ப்பாராகவும், இந்தச் சாணார் அறிவு நூற் பயிற்சி இல்லாதவராக, இதுபற்றித் தீத்தொழிலுக்கு அஞ்சாராக, இதுபற்றிப் பழிபாவங்களுக்கு அஞ்சும் மற்றைச் சாதியாரிலும் இவர்கள் வியாபாரத்தைப் பெருக்க வல்லவர் என்ற கருத்து வகையினாலே தாம் ஓர் பொது வியாபார யூகத்திறமை யுடையவர் என்று சற்குணர் கூறினர் போலும். அங்ஙனமாயின், அவர் சொல்லியது ஒக்கும்! ஒக்கும்!!

சிவகாசி வாசியாகிய கவர்ன்மெண்டு உத்தியோகஸ்தர் ஒருவர் சாணார் வியாபாரத்தினாலும் கீர்த்தியினாலும் சிறந்தவர் ஆதலினால் நாடாள்கள் என்று சொல்லப்படுகின் றார்கள் என்று எழுதியிருக்கிறார் என்கிறார். தங்களை வாழ வைத்தவரும் உண்மையுரைத்த தமது குருவுமாகிய பிஷப்பினும் பெயர் சுட்டப்படாத ஒரு கவர்ன்மெண்டு த உத்தியோகஸ்தர், உயர்ந்தவர் என்று கொண்டனரோ? தாமும் கவர்ன்மெண்டு உத்தியோகஸ்தர், அவரும் கவர்ன்மெண்டு உத்தியோகஸ்தர் என்ற உரிமைப்பாடு பற்றி பிஷப்பினும் உத்தியோகஸ்தன் நம்பப்படத்தக்கவன் என்று கொண்டனரோ? யானே கவர்ன் மெண்டிலேயே உயர்ந்த உத்தியோகம் பெற்றுக் கொண்டேன். இனிப் பாதிரிமா ரிடத்திலே யான் போக வேண்டிய ஆவசியகம் எனக்கு இல்லையே. மற்றையச் சாணாரை எல்லாம் பாதிரிமார் என் பொருட்டு வைதாற்றான் என்னை? செய்ந்நன்றி கொன்ற படுபாவிகள் இச்சாணார் என்று தூற்றினாற்றான் என்னை? நாமும் நமதுபெண்டுபிள்ளைகளும் இசையோடு வாழ்ந்தாற் போதும் சுவாபிமானத்தினாலே பிஷப்பைப் பார்க்கிலும் உத்தியோகஸ்தன் சொல்லியது உறுதி என்று வரைந்து விடுவோம் என்று வாயில் வந்தன சாற்றிப் புலம்பினரோ? நாடாள்கள் என்றமையினாலே வியாபாரத்

என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/322&oldid=1591292" இலிருந்து மீள்விக்கப்பட்டது