உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் – 27 ❖

தினாலும் கீர்த்தி யினாலும் ஓங்கினவர் என்று எந்த நூலிலே கண்டார்? இவருக்குச் சான்றாக வந்த சான்றார் பெயர்தா ன் என்னை? வெளியிட்டா லாகாதோ? வெளியிட்டால் அவரது சான்றாண்மை வெட்டவெளியாமென்று பயந்தோ? சற்குணர் நாடாள்கள் என்பதற்கு நாட்டையாளுபவர் என வியாக்கி யானஞ் செய்கின்றார். அது பொருந்தாது. பின் அர்த்தம் யாது எனில், சொல்வேம், நாடாள்கள் என்பது, நாடு ஆள்கள் எனப் பிரிந்து ஆராயுஞ் சனங்கள் எனப் பொருள் கொள்ளும். பொருள்படவே, சாணார் பதநீர் இறக்குங் காலங் களையும், நுங்கு சீவுங்காலங்களையும், பனங்காய் அறுத்து வீழ்த்துங் காலங்களையும் கள்ளு இறக்குங் காலங்களையும் பதநீர் காய்ச்சிப் பதம்பார்க்குங் காலங் களையும், மற்றைப் பனைப் பிரயோசனங்களையும் எல்லாம் பெற்று அநுபவிக்குங் காலங் களையுந் தவற விடாது ஆராய்தலாகிய நாடுதலிலே வல்லவர்களாதலி னால் இவர்கள் நாடாள் களெனச் சுருதி யுக்தி அநுபவங் களுக்கு ஒப்பச்சொல்லப் படுவாரென்று வியாக்கி யானஞ் செய்வதே நீதியாகும்.

சாணார் என்பதையும் சாணார், சான்றாரென்னுஞ், சொல்லின் திரிபு என்று சொல்வதற்குப் பிரமாணமில்லை. அவ்வாறு சாணார் தான் சான்றாரென்றாலும், சான்றார் சான்றவரென்றாலும், சான்றார் சான்றோரென்றாலும் இம் மொழிகள் நேரே க்ஷத்திரியச்சாதியைக் குறிப்பதற்கு யாதொரு லக்கியப் பிரமாணமு மில்லை. சாணார் நாடாரென்று சொல்லப்படுகின்றமையினாலே இதற்கு அர்த்தம் யாது என்பீராயின், நாடாரென்பது பணத்தினா லாயினும் உத்தி யோகத்தினாலாயினுஞ் சிறந்த சாணா ருக்கு மாத்திரம் உபசார மாய்ச் சொல்லப் படுதலினால் இச்சாணார் தங்கள் முன்னோர் கள்போல் இராது, பனைப் பிரயோ சனத்தை மிகுதியும் விடுத் தாராதலினால் நாடாரென்று சொல்லப்படலாம். மற்றுள்ள சாதி யாரிலும் இச்சாணார் நகரத்தை விடுத்துப் பனைகள் மிகுந்து செழித்து வளரும் நாடுகளைத் தேடி யங்கேவசிக்கு மியல்பு டையா ராதலின் நாட்டிலுள்ளாரென்று பொருள் பெற்று நாட்டா ரென்றாயிற்றெனவும் பொருள் கொள்ளலு மொன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/323&oldid=1591293" இலிருந்து மீள்விக்கப்பட்டது