உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசண்ட மாருதம்

299

நாடாள்களென்பதற்கும் இப்படியே நாட்டிலுள்ளா ரென்று அர்த்தம் முடித்தல் கூடுமோவெனில், அது நாட்டாட் களென்று வந்தாலன்றி அங்ஙனம் பொருள் கொள்ள இலக்கணம் இடங்கொடாது. இனி நாட்டை ஆண்டவர் என்று சற்குணர் கூறியபடி சாணாருக்கு ச் சொல்லலா மோவெனில், அதுவும் நாட்டார் என்று வந்தாலன்றிக் கூடாது. நாட்டை ஆண்டவர் ஆதலினாற்றான் நாடாள் களென்று வந்தது என்று சற்குணர் கூறியபடி சொன்னால், அவ்விலக்கணம் அதிவியாப்தியென்னுங் குற்றத்தைப் பொருந்துகின்றது. இராஜாக்கள், கோனார், தேவர் முதலிய ஜாதிகள் பலர்க்கும் வரம்பின்றி யோடுமாதலினென்று அறிக. கம்மாளர், பிராமணர்க்குரிய ஆசாரிப்பட்டத்தினால் உபசாரமாக யழைக்கப் படுதல்போலச் சாணாரும் நாடான் நாடாரென்று சொல்லப் படுகிறார்கள். சாணார் க்ஷத்திரிய ரென்பதற்குச் சற்குணர் சாதித்த நியாயங்களை முன்னரே சாதிப்பாம். திவாகரம், நிகண்டு என்னுமிரண்டினும் மக்கட் பெயர்த் தொகுதியிலே சூத்திரங்களும் பாட்டுக்களும் சாதி முறைப்படி பாடப்பட்ட ன வென்றும் திவாகரத்திலே (32)-ம் சூத்திரத்திற்கும் நிகண்டின் (25)ம் பாட்டிற்கு முன்னே பார்த்தால் எட்டாஞ் சூத்திரம் ஐந்தாம் ஆறாம் பாட்டுக்களும் பார்ப்பாரென்ற பெயரினாலே பிராமணரைக் குறித்தன எனவும், (32)ம் சூத்திரமும் (25)ம் பாட்டும் வைசியரைக் குறித்தன எனவும், எனவே க்ஷத்திரியர் பெயர், பிராம ணரைக் குறித்த செய்யுள் களுக்கும் வைசியரைக் குறித்த செய்யுள்களுக்கும், இடையிலேயே வரவேண்டும் எனவும், தமிழருள்ளே க்ஷத்திரியரென்ற ஜாதி இல்லாமையினாலே அந்த க்ஷத்திரியரைக் கருதிய சூத்திரங் களும் பாட்டுக்களும் இவைகள் தாமென்று எளிதில் நிச்சயித்தறிதல் கூடாது எனவும், ஆதலின், தொல்காப்பியத் திலே “அந்தணர் திறத்தும் சான்றோர் திறத்தும்" என்றது பிராமணரிடத்தும் சான்றோரிடத்தும் எனப்பொருள் படுகின்றமையாலும், சிந்தாமணியிலே நச்சினார்க்கினியர் "பார்ப்பார் சான்றோ ருள் ளிட்டாருங் கூடிச் சீவகனைப் பெயரிட்டார்” ர்" என உரைசெய்தமையானுந், தஞ்சை வாணன் கோவையிலே அந்தணரையுஞ் சான்றோரையு முன்னிட்டு வரைந்து

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/324&oldid=1591294" இலிருந்து மீள்விக்கப்பட்டது