உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

300

❖ ✰ மறைமலையம் - 27

என்று சொல்லப் பட்டமையாலும், பார்ப்பாரென்னும் பட்டப்பெயர் பிராமணருக்கு எப்படி வழங்குகின்றதோ அது போலச் சான்றோர் (கல்விமான்கள்) என்பதும், க்ஷத்திரி யருக்கே வழங்கப்படுகின்றது எனவும், எல்லோரும் பார்ப்பாராயிருந்தாலும் பார்ப்பாரென்றது பிராமணருக்கே சொல்வது போல, எல்லோரும் படித்தோ ரென்று பாருள்படுகின்ற சான்றோர் என்பதும் க்ஷத்திரி யருக்கே சால்வதெனவும், பிராமணருக்கு ஞானக்கண் எப்படி ஆவசியகமோ அப்படியே க்ஷத்திரியருக்குக் கல்வி ஆவசி யகம் எனவும், இதுபற்றியே திருக்குறளிலே கல்வி அரசி யலுள் வைக்கப்பட்டதெனவும், அப்படியே பழ மொழி யிலும் நாலடியாரிலும் சொல்லப் பட்டது எனவும், மூன்று மூன்றான் என்பதை மூணு மூணான் என்றும், தோன்று தோன்றார் என்பதை தோணு தோணா ரென்றும் குவனபோலச் சான்றாரென்பது சாணா ரென வழங்குகின்றது எனவும், சான்றார் சான்றவர், சான்றோர் என்னும் சொற்கள் (மிகு) எனப்பொருள் கொள்ளப் படுகின்ற (சாலு) என்னும் பகுதியில் நின்று பிறந்தன எனவும், பிறக்கவே, சான்றவர் சான்றோர் சான்றாரென்பன ஒரு பொருள் கொண்ட மொழிகளா மெனவும், மேலே சுட்டிய நியாயங் களினாலே திவாகரத் திலே அறிவுடையோரை உணர்த்திவரும் சான்றோர் முதலிய பெயரும், நிகண்டிலே அறிஞரை உணர்த்திவரும் சான்றவர் என்ற பெயரும், க்ஷத்திரியரையே குறித்தன எனவும் அதனாலே சாணாரே க்ஷத்திரியரெனவும் சொல்லு கின்றார். இன்னும் நிகண்டு, திவாகரங்களிலே கள் விற்போருக்குப் பெயரிருக்கவும் கள்ளிறக்கு வோருக்குப் பெயர் காணப்படாமையினாலே, பறையர், துரும்பர், நளவர், பள்ளர், புறதவண்ணார் என்பவருக்கு நிகண் டிலே பேர் காணப்படாமைபோலச், சாணாருக்கும் பெயர் சுட்டப்படாதிருத்தலை ஆராயாது புலிக்குப் பசுத் தோலிட்டு மூடிப் பசுக்கூட்டங் களுள்ளே ஓட்டியவாறு போலச் “சாணார்” என்னுஞ் சொல்லைச் சான்றார் சான்றவர், சான்றோர் என்னும் பெயர்த்தோலுக் குள்ளே புகட்டி, மறையவர் பெயருக்கடுக்க மாட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/325&oldid=1591295" இலிருந்து மீள்விக்கப்பட்டது