உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசண்ட மாருதம்

301

க்ஷத்திரியர் பெயராகிய அரசன் பெயருக்குமேலே நீட்டி, அரசனுக்குரிய தொழில்களொன்றையுங் காட்டாத பெயர் களாகிய அறிஞர் பெயர்களோடு கூட்டிப் பூட்டி,

“யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

(குறள் 127)

என்னும் ஆன்றோர் ன்றோர் வாக்கியத்தையும் படியாது நரிவால்கொண்டு கிணறு ஆழம்பார்க்கத் துணிந்தமை போலத், தமது அற்பத் தமிழறிவுகொண்டு எல்லாவற்றையும் அறிந்தவர்போல நடித்துத் தமது அறியாமையைக் காட்டி இருக்கின்றார் என்பதை யாவரும் ஒத்துக்கொள்ளும் வண்ணம் சொல்வேம்.

முதலாவது, சற்குணர் சான்றார் என்றது நிகண்டு திவாகரங்களிலே க்ஷத்திரியரை யுணர்த்திவரக் காட்டுவாரா?

இரண்டாவது, நிகண்டு திவாகரங்களிலே காணப் படாத சொற்கள் அகராதியிலே காணப்படுமாதலின், றட்லர் அகராதி உவின்ஸ் லோ அகராதி, பெல்சி அகராதி, பெர்சிவல் அகராதி, சதுரகராதி முதலியவை களிலே சான்றாரென்பது க்ஷத்திரி யருக்குப் பெயராகக் காட்டுவாரா?

மூன்றாவது, அகத்தியம், தொல்காப்பியம், நன்னூல், தொன்னூல் விளக்கம், இலக்கணக்கொத்து, நேமிநாதம், பிரயோக விவேகம், இலக்கண விளக்கம், வீரசோழியம், முத்துவீரிய முதலிய இலக்கணங்களிலே சான்றார் என்பது க்ஷத்திரியருக்குப் பெயராகக் காண்பிப்பாரா?

நான்காவது, திருவள்ளுவர், திருக்கோவையார், மஹா பாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண் L லகேசி, வளையாபதி முதலிய உயர்ந்த எந்த இலக்கியங்களிலாயினும் சிவ புராணம் விஷ்ணுபுராணம் பிரமபுராணம் ஆக்கினேய புராணம் முதலிய புராணங்களிலாயினும் சான்றோர் என்றது க்ஷத்திரி யருக்குப் பெயராகக் காட்டுவாரா? அவர் அங்ஙனம் பிரமாணங் காட்டு வாராயினன்றோ இவர் தொல்காப்பியத் தினும் சிந்தா மணியினும் கம்ப ராமாயத்தினும் தமக்குச் சார்வாக எடுத்துக் கொண்ட காண் சான்றார் என்றதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/326&oldid=1591297" இலிருந்து மீள்விக்கப்பட்டது