உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

❖ ✰ மறைமலையம் – 27

க்ஷத்திரியரென அங்கீகாரஞ் செய்வேம். அங்ஙனம் அவர் காட்டாமையினால் அவரெடுப்பு அடிபட்டு ஒழிந்து போயிற்று. வினை

-

L

உண்டு என்ற மொழி தன்மையொருமை முற்றாகும் போதும், இறந்தகால வினையெச்சமாகும் போதும், முறையே உண்-டு எனவும், உண்-ட்-உ எனவும், அஃறினை யொன்றன் பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்றாகும்போது, உள்(மை)-டு எனவும் பிரிந்து வெவ்வேறு பொரு ாருள் கொள்ளுமாறு போலச், சான்றார் என்ற மொழியும், சாறு-(கள்) ஆர் எனப்பிரிந்து, நெடிலோ டுயிர்த் தொடர்க் குற்றுகரங்களுட் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே” என்ற சூத்திர விதிப்படி “சாற் றார்” என வந்து மெலித்தல் விகாரம் எய்திச் சான்றாரென் றாயிற்று. இது சற்குணராலே எடுத்துச்சொல்லப்பட்ட டாக்டர் உவின்ஸ்லோவுக்கும் உட டன்பாடாகும். உவின்ஸ்லோ அவ்வாறு சான்றாரென்றதை சாறு என்னும் பகுதியில் நின்றுந் தோற்று வித்ததற்கு ஆதாரமில்லையெனச் சற்குணர் கூறுகின்றார். இங்ஙனமாயின் இவர் அகத்தியர் சொல்லி யவைகளுக்கும் ஆதாரமில்லை என்பார். நக்கீரர் சொல்லிய வைகளுக்கும் ஆதாரமில்லை என்பார். இங்ஙனம் இச் சற்குணர் தமக்குச் சார்பாக எழுதாதவர்களெல்லாரிலும் பாய்வார் போலும். இது நீதியன்று. உவின்ஸ்லோ என்பவர் தமது பெயரினாலே அவ்வகராதியைப் பிரசுரஞ் செய்து விட்டாராயினும், அவர் எந்த பண்டித சிரோமணிகளுடைய சகாயத்தினாலே எழுதி யிருக்கிறார் என்பது, அப்புஸ்தக முகவுரையைச் சற்குணர் தலைகுனிந்து, கண் திறந்து பார்த்தால் இனிது புலப்படும். சான்றார் என்றதைச் சாதிப் பெயராகக் கொண்டு (சாலு) என்னும் பகுதியினின்றும் தோற்றுவித்துச் சற்குணர், சாணார் படித்தவர்களென்று சொல்வாராயின், எந்தக் காலத்திலே, எந்த இடத்திலே எந்தச் இ சாணான் ஓர் நியாய சாஸ்திரம் இயற்றினான்? எந்தச் சாணான் வைசேஷிக சாஸ்திரம் செய்தான்? எந்தச் சாணான் சாங்கிய சாஸ்திரம் பொறித்தான்? எந்தச் சாணான் யோக சாஸ்திரம் தீட்டினான்? எந்தச் சாணான் மீமாம்ச சாஸ்திரம் வரைந்தான்? எந்தச் சாணான் வேதாந்த வேதாந்த சாஸ்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/327&oldid=1591298" இலிருந்து மீள்விக்கப்பட்டது