உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

6

303

வெளிப்படுத்தினான்? எந்தச்சாணானுக்குச் சிக்ஷை நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குக் கற்பநூல் தெரியும்? எந்தச் சாணானுக்கு வியாகரணநூல் தெரியும்? எந்தச் சாணானுக்கு நிருத்த நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குச் சந்தோவிசிதி நூல் தெரியும்? எந்தச் சாணானுக்குச் சோதிடநூல் தெரியும்? அவரெல்லாம் நமது ஊனக் கண்ணுக்காயினும், ஞானக் கண்ணுக்காயினும், புலப்பட வில்லையே! பாவக்கலியுக சுவிசேஷத்தாலோ? அறிகிலேம். இவற்றையெல்லாம் நாடார் நன்றாக நாடினால், பனையிலிருந்து மிருதுவாகக் கள்ளிறக்குவது போல இவர் சான்றாரென்ற சாதிப்பெயரையும் சாலுப் பகுதி யினின்றும் இறக்காது காற்றுப் பகுதியினின்றும் இறக்குவார். சற்குணருக்குச் சாணாரை யெல்லாம் க்ஷத்திரிய ராக்கப் பேராசை யுண்டாயின், சாணாரெல்லோரையும் பனையேறிக் கள்ளிறக்கா திருக்குமாறு ஓர் புஸ்தகம் முதற்கண்ணே பிரகடனஞ் செய்வாராக. இந்த இலக்கணத்தைச் சாணாருக்கு நாடிக்கொண்ட பின்னர் இடித்துலராயின், மற்றைச் சிறப்பு க்ஷத்திரிய இலக்கணங்கள்..... ஒருவர் என்றது க்ஷத்திரியரெனப் பொறித்துவிட்டனரே யன்றி நிகண்டிலே அரசன் பெயரிலேயே பூமியைக் காப்பவன், நரருக்குத் தலைவன் எல்லோருக்குந் தலைவன் என்பவைகளின் கருத்தையடக்கிப் பார்த்திபன், நரபதி, நிருபன் என்ற சிறப்புச் சொற்கள் காணப் பட்ட வழியும், அரசனுக்குரிய சிறப்பு தர்மம் ஒன்றுமில்லாத அறிஞர் பெயரை க்ஷத்திரியரெனவும், க்ஷத்திரியரே சான்றவர் எனவும், அதுவே சாணார் எனவும் ஓர் பொய்மொழியைக் கற்பித்துக் கழுதை யைக் குதிரையாக்கத் துணிந்த தென்னாலு ராமனைப் போலவும், அம்பட்டனைப் பிராமணனாக்க முயன்ற மூட சிரோமணி யாகிய ஓரரசனைப் போலவும் மிக்க வருத்த மடைகின்றாரே ஐயோ பாவம்! பாவம்!! இவர்தான் பட்டப்பகலை இரவென்று சொல்லும் பாதகருக்கு உதாரண மாக..... அயோத்தியிலே சூரிய குலத்திலே க்ஷத்திரிய வம்சத் தாராகிய இராமசுவாமி, இராவணனாலே கவர்ந்து கொண்டு போகப்பெற்ற தம் மனைவியாகிய தேவியை இலங்காபுரிக்குப் போகும்போது தென்இந்தியாவுக்கு பதுங்கப் பார்க்கிறார்.... பனைகள், தமக்குக் கவிந்து, குடிப்போர்க்குக் கள்ளுக் கொடுக்குமோ? கொடுக்க மாட்டாவே, பின் புலாலுண்பவர் இல்லையாயின், புலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/328&oldid=1591299" இலிருந்து மீள்விக்கப்பட்டது