உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

❖ * மறைமலையம் - 27

கவர்ந்து விற்பவரும் இல்லையாம் என்ற நியாயத்தினாலே, கள்ளுக் குடிப்பரில்லை யாயின், கள்ளிறக்குவோரும்

மில்லாமை

இல்லையே! இதுபற்றியே, நாவலரவர்கள் கள்ளுக்குடிப்போர் முதலாயினோருக்குத் தண்டனை கூறினார். கூறினாராயினு மகானு பாவ ராகிய இராமரைச் சேர்ந்த விசேஷத்தினாலே குரங்குகளும் க்ஷத்திரிய ரெனப் படலாம். குரங்குகளுக்கு வஸ்திர மில்லா மையாலும், மலைகளில் வசித்த வேடர்களுக்கும் வஸ்திர யாலும், குரங்குகளுக்கும் க்ஷெளரமில்லாமையாலும், வேடர் களுக்கும் ஷௌர மில்லா மையாலும், குரங்குகளுக்கும் மரம் ஏறும் வழக்கம் உண்மையானதும், வேடர்களுக்கும் மரங்களி லேறும் வழக்கம் உண்மையானும், குரங்குகளுக்குங் காய் கனிகள் உணவாமா தலினாலும், வேடர்களுக்குங் காய் கனி கள் உணவாமாத லினாலும், குரங்குகளுள்ளும் வாலின்மை யுளவாமாத லினாலும், வேடர்களுக்கும் வாலின்மை யுளவா மாதலி னாலும், வில்லியம்ஸ் சொல்லிய பிரகாரம் (Indian Wisdom Vide 312 P.) இராமரோடு வந்த வேடர்கள் குரங்குகளாக உவமிக்க பட்டன ராதலினாலும், வருண மரபின்படி வேடரை யடுத்துச் சான்றாரெனப்படும் சாணார் வருகின்றமையாலும், இந்தச் சாணாரே அவரின் வேறின்றித் தோன்றிய க்ஷத்திரிய ரென்று சொல்லலா மெனிலும், அதையுஞ் சாணார் ஆனந்தத் தோடு அங்கீ காரஞ்செய்யா ரெனத் தோன்றுகிறது.

சற்குணர் வடநூலாகிய சமஸ்கிருத உணர்ச்சியின்றித் திவாகரம், நிகண்டு என்கிற இரண்டையும் ஆதரவாகப் பற்றி ஏறி அறிஞரைச் சான்றாரெனவும், அவரே க்ஷத்திரிய ரெனவும் கொண்டு, உயர்ந்து பறந்தமை, ஆற்றின் பிரவா கத்திலே உயர்ந்த மணற் கோட்டை யொன்றைக் கட்டி, அதன் சிகரத்தில் ஏறி, மேகமண்டலத்தை எட்டிப்பிடித்து விட்டேனென்று எண்ணிக் கொண்டு மௌட்டிகன் ஒருவன் தூங்க, உடனே ஆற்றுப் பாய்ச்ச லினாலே கோட்டை அடியும் விண்டு, முடியும் விண்டு உடைந்து ஒழிந்தமை போல அழிந்துவிடுமன்றோ. திவாகரத்தின் முறைப்படியே நிகண்டு பாடப்பட்டுள்ளது. வடமொழி அமரகோஷமும் பிரம வர்க்கம், க்ஷத்திரியவர்க்கம், வைசிய வர்க்கம், சூத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/329&oldid=1591300" இலிருந்து மீள்விக்கப்பட்டது