உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

305

வர்க்கம் என நான்கு வர்க்கங்களாகவே பிரிக்கப்பட்டு, அவ்வவ் வருணங்களோடும், வருணத்துக்குரிய தொழி லோடும், முறைப்படி காணப்படுமாறுபோல, நிகண்டும் மறையவர் பெயர் முதல் சூத்திரர் பெயர் இறுதியாக அவ்வவருக்குரிய தொழிலோடும் காணப்படும். அமரத்திலே, பிரமவர்க் கத்திலே, பிராமணர் (மறையவர்) பெயரும், வித்துவான் (கலைஞன்) பெயரும், வேதாத்தியயனஞ் செய்வோர் (ஒத்துரைப்போர்) பெயரும், சிஷியன் (சீடன்) பெயரும், ஆசாரியன் (ஆசாரியன்) பெயரும், உபாத்தி யாயன் (உபாத்தி யாயன்) பெயரும், சபையின் (திரண் டோரின்) பெயரும் பிறவும் காணப்படுமாறு போல, நிகண்டினும் காணப்படுகின்றன. பின்னர் அமரத்திலே, க்ஷத்திரிய வர்க்கத்திலே, க்ஷத்திரியன் (அரசன்) பெயரும், மந்திரி (அமைச்சன்) பெயரும், மற்றை அரச அங்கங்களின் பெயரும், காணப்படுமாறுபோல, நிகண்டினும் காணப்படு கின்றமையாலும், க்ஷத்திரியருக் குரிய பெயராயினும், தொழி லாயினும், அங்கங்களாயினும், மறையவர் பெயருக்கும் அரசன் பெயருக்கும், இடையிலே காணப்படாமையானும், அரசன் பெயருக்கு அடுத்த க்ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்த மஹா பாரதத்திலே கூறப்படும் வீட்டுமன் பெயர், குருகுல வேந்தர் பெயர், தருமன் பெயர், துரியோதனன் பெயர், கண்ணன் பெயர், வீமன் பெயர், அர்ச்சுனன் பெயர், முதலாயின காணப்படுகின்ற மையானும், நிகண்டிலே தோற்றும் அரசன் பெயர்களாகிய பூபாலன், நரபதி, பார்த்திபன் முதலியன க்ஷத்திரியர் பெயராக வடமொழி நிகண்டிலே காணப்படுகின்றமையானும், வட மொழி அபி தான கோஷத்திலே காணப்படும் இராஜன், வாகுசன், க்ஷத்திரியன், விராட்டு, இராட்டு பார்த்திபன், பூபன், மகீபன் முதலிய பெயர்கள் தென்மொழி நிகண்டு அகராதி முதலிய கோஷங்களிலே அரசன் பெயர்களாகக் காணப் பட்டமை யானும், “அறிஞர் பெயர்” ஆனது மறையவரைச் சார்ந்த துரோணாசாரியன் (ஓர் பிராமணர்) பெயருக்கும், ஆசாரியன், மாணாக்கன், சீடன் என்னும் இவர்களின் பெயருக்கு முன்னும் காணப்படுகின்றமையானும், இவை யெல்லாம் காரணம்பற்றிச் செல்லினும், பிராமணருக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/330&oldid=1591301" இலிருந்து மீள்விக்கப்பட்டது