உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி

306

ட்ட

❖ ❖ மறைமலையம் – 27

டையார்

வைகளாம் என்பது அற்ப சமஸ்கிருத உணர்ச்சி உடை வாயிலாக, வடமொழி அமரத்தையும், தென்மொழி நிகண் டையும் ஒத்துப்பார்த்தால் வெட்டவெளிபோல விளங்கு மாதலினாலும், சற்குணர் சாணாரை க்ஷத்திரியராக்கத் துணிந் தமை, “நீர்க்குமிழிக்குப் பூண்கட்ட முயன்றமை போல நிஷ்பல மாகிவிட்டது. பாதிரியார் குருட்டுத் தமிழறிவின ராலே செலுத்தப்பட்டுப் பொய் முடைகிறார் என்கின்ற இந்தச் சற்குணர், குருட்டுச் சமஸ்கிருத உணர்ச்சி யுடைய பிராமண ராலே தாமும் உந்தப்பட்டாரோ தெரிந்திலது. யாம் இங்கே சொல்லியதைக்கேட்டு அறிந்தா யினும் வாயடங்குவாராக. சாணார் க்ஷத்திரியரென்று உபதேசித்த பார்ப்பான், நம்மைப் போல உண்மை வெளிப் படுத்தாது “சான்றார், க்ஷத்திரிய ரென்று சற்குணர் எழுதி அவமான மடையட்டும் நமக்கென்ன வென்று தமது று வாயினுள்ளே மொறுமொறுத்துக் கொண்டு போய் னரோ? இப்படி அப்பிராமணர் கருத்து உள தாயின், அவர் கருத்து விசேஷமாகத் தமது வயிறு வளர்த்த லினிடத்திருந்திருக்கலாம். ஓர் போது சற்குணர் மீது கொண்ட கோபத்தினாலே அப்பிராமணர் உண்மை உரைத்திலரோ? அப்பிராமணர் வடமொழி தென்மொழி இரண்டும் அறியாரோ? உண்மை நமக்குத் தெரிந்திலது. அப்பிராமண ராயினும், சற்குண ருடைய கனங் கொண்ட சிநேகராயினும், பிரபுக்க ளாயினும், சாணான் - சான்றான், சான்றான் சான்றவன், சான்றவன் க்ஷத்திரியன், எனவே, சாணான் க்ஷத்திரியனென்று தாபிப்பார்களா? தாபிப்பா ராயின், அவர்கள் கடிதங்களும் சாற்றுக் கவிகளும் கொடுத்து அவர் புஸ்தகத்தோடே அச்சிடுவியாது விட்ட மைக்குக் காரணம் என்னை? தாபிப்ப வருக்கு யாமெல்லாம் வந்தனம் சாற்றுவேமே. அவர்க்கெல்லாம் சமயம் வாய்த்தி லதோ? ஐயையோ; இவரெல்லாம் பின்னே நின்று நற்குண முடைய சற்குணரை முந்தி உந்தினார்களே. பாவம்! பாவம்!! அவர் என் செய்வார்! சாணார் க்ஷத்திரிய ரென்று சற்குணர் சாதித்து எழுதிய புஸ்தகத்தை ஐரோப்பிய ராயினும் சுதேசிகளாயினும் அங்கீகாரஞ் செய்யார்.

-

ஓர்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/331&oldid=1591302" இலிருந்து மீள்விக்கப்பட்டது