உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரசண்ட மாருதம்

307

இனி, தொல்காப்பியம், சீவகசிந்தாமணி, கம்பராமா யணம், தஞ்சைவாணன்கோவை முதலிய நூல்களிலே சான் றோர் என்றமொழி ஜாதி நோக்காது கல்வி அறிவொழுக்கங் களை யுடையவரை உணர்த்தி நின்றது. முன்னரே பிராமணர் என்று சொல்லிவிட்டுப் பின்னர் சான்றோர் என்றது யாரை யெனின் முன்னர்க்கூறிய பிராமணர் சாதாரணமாகச் சுபகருமங்களுக்கு ஆவசியமாக வேண்டப்படும் பிராமணரையும் பின்னர்க் கூறிய சான்றோர் சுபக்கருமங் களுக்குப் பெருமை பாலிக்கும்படி வந்த பிறரையும் என அறிக. இங்ஙனம் பொருள் சொல்வதை விடுத்து, “அந்தணர் சான்றோர்" என்றதற்குப், பிராமணரும் "சான்றாரும் என்றாவது, “சாணாரும்” என்றாவது ஒருவர் சபையிலிருந்து வாய் பிளப்பாராயின், அவர் உடனே திருவடி தீக்ஷை பெறாதிருக்கமாட்டார்.

இதற்குச் சற்குணர் மேலே கூறிய பிரகாரம், சுருதிக்கும், யுக்திக்கும் அநுபவத்திற்கும் ஒருவனுக்கும் ஓரிடத்தினும் ஓர் காலத்திலாயினும் ஒவ்வாத வீண்குதர்க்கப் போலி நியாயங் களைக் கொண்டு, பார்ப்பார் பெயரை அடுத்து வந்த கலைஞர் பெயரிலே சாணாரைச் சேர்த்து க்ஷத்திரியராக்கு வாராயில், நாவிதரும் தங்களுக்கு நிகண்டு திவாகரங்களிலே இட்ட பெயர்கள் போதாவென்று, தங்களுக்கு வழக்கமாக வழங்கும் பண்டிதர் பெயரோடு தோன்றிப் பண்டிதர் பெயர் நிகண்டிலே அறிஞருக்குச் சான்றவரென்ற பெயர் உள்ள தெனவும், உளதாகவே, சற்குணர் முன் சாதித்த போலி நியாயங்களினாலே, சான்றவர் க்ஷத்திரியர் என்று ஸ்தாபிக்கப்பட நாவித பண்டி தரும் தாங்களும் க்ஷத்திரிய ரென்று ஸ்தாபிக்கப்பின்னிடார். க்ஷத்திரியர்தான் சாணார் என்று சற்குணர் சொல்ல, நாவி தரையும் சாணாரென்று சொல்ல நேரிடுமன்றோ. கோனா ரென்னும் பெயரினாலே வழங்கப்படுகின்ற இடையரும், தமிழ் அகராதி கொண்டு, தாமும் க்ஷத்திரியரென்பார். சற்குணர் சாதித்தபடி, க்ஷத்திரியர் சாணாரெனப்படுவார், ஆகவே, யரும், சாணாராவார், இராஜாக்கள் சாதியாரும் அவ்வாறு க்ஷத்திரியராவார்; சற்குணர் சாணாரை க்ஷத்திரியரென்பார்; அப்போது நாவிதரும், இடையரும், இராஜாக்கள் முதலிய சாதிகளும், சற்குணராலே இவ்வாறு இழித்துக் கூறப்பட்டு

டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/332&oldid=1591303" இலிருந்து மீள்விக்கப்பட்டது