உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச்

பிரசண்ட மாருதம்

309

பெரியபுராணச் செய்யுளொன்றைச் சற்குணர் வரைந்த பின்னர், கருக்குவாட்பட்டைச் சான்றாரெனத் தங்க ளுள்ளே வேறு சாதியார் சிலருண்டெனவும், சாற்றுகின்றார். ஏனாதி நாயனார் சான்றாரென்றும், அவருக்கும் அவர் பந்துக் களுக்கும் வாட் படை பயிற்றுந்தொழிலுண் டென்றும், வில் வித்தை க்ஷத்திரியத் தொழிலாதலினால், ஏனாதி நாயனார் க்ஷத்திரியரெனவும், எனவே, சான்றார் க்ஷத்திரிய ரெனவும் சொல்லத் துணிகின்றனர். அப்படி யானால் இவராலே புகழ்ந்து பாராட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் பிரசுரஞ்செய்த திருத்தொண்டர் பெரிய புராணத்தின் முதற்கணுள்ள திருத்தொண்டர் வருண மரபு என்றதைச் சற்குணர் சிறிதும் வருத்தமுறாது எடுத்து வாசிப் பாராயின், அவ்வருணத்திலே, முதலிலே ஆதி சைவரையும், அவருக்குப் பின்னே பிராமணரையும், அவருக்குப்பின்னே மாமாத்தியப் பிராமணரையும் அவருக்குப் பின்னே க்ஷத்திரி யரையும், அவருக்குப்பின்னே மன்னரையும், அவருக்குப்பின்னே வைசியரையும், அவருக்குப் பின்னே வேளாளரையும், அவருக்குப் பின்னே இட டையரையும், அவருக்குப் பின்னே குயவரையும், அவருக்குப் பின்னே பாணரையும், அவருக்குப் பின்னே வேட ரையும், அவருக்குப் பின்னே சான்றாரையும், அவருக்குப் பின்னே கலியாரையும், அவருக்குப் பின்னே ஏகாலியரையும், அவருக்குப் பின்னே புலையரையும் வைத்த முறையினாலே சாதி முறைமை நன்றாக விளங்கும். அவ்வருணமரபிலே க்ஷத்திரியர் சேரமான் பெருமாணாயனார், புகழ்ச்சோழ நாயனார், நெடுமாற நாயனார், இடங்கழி நாயனார், மங்கையர்க் கரசியார், கோச்செங்கட்சோழ நாயனார் என அறுவராம். சான்றார் - ஏனாதிநாயனார் என ஒருவராம். ஏனாதிநாயனார் வாட்படை பயிற்றினமையாலே சற்குணர் கூறியபடி க்ஷத்திரியராயின், பின்

குறுநில

வரை க்ஷத்திரியரோடு சேரா தொழிதற்குக் காரணம் என்னை? அப்போது அந்தச் சற்குணர் உடனிருந்திலரோ? மறந்தனரோ? பிறந்திலரோ? அறியேம்! அறியேம்!! க்ஷத்திரிய வம்சத்திலே சொல்லப்பட்ட மேற்கூறிய அரசர்கள் சேர சோழ பாண்டிய இராஜாக்களாத லினாலே, அவர்களைச் சாணாரென்று சற்குணர் சாதித்த நியாயங்கள் புற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/334&oldid=1591305" இலிருந்து மீள்விக்கப்பட்டது