உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மறைமலையம் - 27

ராய்ச்சியிலே கட்டை அறிவுடையவர் என்பதும் தானே தெளிவாகின்றது. இந்த பீ.ஏ. பட்டம் பெற்றவரே இவ்வளவு சுழுகிலே சாணாரை க்ஷத்திரியராக்கும் தன்மையிலே தமது மௌட்டியத்தை வெளிப்படுத்துவாராயின், தண்டாபூபிக நியாயத்தினாலே மற்றைச் சாணாரும் இத்துணையரென்பது நிச்சயிக்கப்பட்டது. இங்ஙனம் இடையன்குடிச் சாணாரை நோக்கிவிட்டு மற்றைத் திருநெல்வேலிச் சாணாரையும் அவ்வாறு பிஷப்புத் தண்டாபூபிக நியாயத்தால் நிச்சயித் தனர் போலும். இதனால் சற்குணர் பிஷப்பு சொல்லியவற்றை வள்ளைப்பொய் கறுத்தப்பொய் என்று நிந்தித்தமை அடாது. பாதிரியாருக்குத் தேகம் எப்படி வெண்மையோ, அப்படியே மனமும் வெண்மை பொருந்தித் திருநெல்வேலி யிலுள்ள சாணார் இழிந்த சாதியார் என்றும், அவர்கள் சூத்திரருக்கும் புலையருக்கும் இ டையிலுள்ள சாதியா ரென்றும் கூறினார். அவர் சொல்லியபடியே பெரிய புராணத்துத் திருத்தொண்டர் வருண மரபிலும் சொல்லப் பட்டிருக்கின்றது. பாதிரியார் மெய்யராகவே, சற்குணரே தமது தேகம் போல இருள் மனம் பூண்டு பொய் கூறினார் என்பது அறியத்தக்கது.

பிஷப்பு திருநெல்வேலிச் சாணாரைக் குறித்துப் புஸ்தகத்தை எழுதினமையினாலே திருநெல்வேலிக் கிறிஸ்து சபைக்குப் பெருங்கேடு விளைந்தது போலவும், பாதிரி மாருக்கும் சாணாருக்கும் விசுவாசக் குறைவும் பகையும் நிகழ்கின்றன எனவும், ஆதலின் ஓர் அளவற்ற கெடுதியைப் பிஷப்பு சாணா ருக்குச் செய்தனராகவும் கூறுகின்றார். பிஷப்பு சாணார் எளிய நிலைமையைப்பற்றி வெளிப்படுத் தினமைக்குக் காரணத்தைச் சிறிது ஆராய்வாம். பாதிரிமார் ஐரோப்பா முதலிய கண்டங் களிலிருந்து அநேகாயிரம் மைலுக்கு அப்புறத்துள்ள இந்த இந்தியாவிலேயிருந்து தங்கள் சுவிசேஷப் பிரசங்கத்தின் பொருட்டுத் தம் தேசத் திலுள்ள அநேக ஏழைகளிடத்திலிருந்து பலவாறாகவும், சிறிது சிறிதாகவும், வாங்கியரூபாவை இங்கே செலவிடும் விஷயத்திலே, மிகச் சாக்கிரதையாக இருக்கும் படிக்குத் தமக்குப்பின் வருகிற பாதிரிமாருக்கும், மற்றைத் தேசத் துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/337&oldid=1591308" இலிருந்து மீள்விக்கப்பட்டது