உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

313

பாதிரிமாருக்கும் தமது ஐரோப்பிய சபையாருக்கும் உண்மை அறியும்படிக்கு எழுதிவிட்டார். எங்ஙனமெனில், ங்கே கிறிஸ்து மதத்திலே பிரவேசிக்க எளியராயினோர் சாணார் பறையர் முதலாயினோர். பிரவேசிக்க அரிய ராயினோர் சூத்திரர் முதலாயினோர். இராப்பகல் பனையிலே தூங்குமியல்புடைய சாணார் தம் தொழில் மிகப் பிராயாசை யுடையதெனவும், பனை யிலிருந்து ஓர் போது தற்செயலாய் விழுந்துவிடினும் துன்மரணம் அடைய வேண்டுமெனவும், கிறிஸ்துமதப் பிரவேசஞ் செய்து ல், நம்மை நிந்திக்கும் கிறிஸ்தவராகிய சூத்திரர் முதலானாரோடு உடனிருந்து சம்பாஷிக்கும்போது, அவர்கள் தமது சபையொழுங்குப் பிரகாரம் யாதும் விரோதமாகப் பேச இடமிராதெனவும் கருதி கிறிஸ்துமதப் பிரவேசஞ் செய்வாரெனவும், இதைஅறிந்த மற்றைச் சாணாரும் நல்ல போசனம் புசிக்கலாம், அழகுடைய வரை விவாகஞ் செய்யலாம், வண்டியேறலாம், என்ற

விட்ட

6

வை

போன்ற பிற நியாயங்களை ஆலோசித்து, விரைவிலே சபையிலே சேர்வார். இப்படிச் சேர்ந்தவருக்கும் அதிகச் சம்பளம் முதலியன கொடுத்தால் அநேக சாணார் ஒருங்கு திரண்டு சபையிலே சேர்ந்து விடுவார். இங்ஙனம் பண நட்டத்தினாலே சுவிசேஷம் பிற இடங்களிலே பரவுதற்கு ஏதுவிராது. பாதிரி மாருக்கு எல்லாரையும் கிறிஸ்துவ மதத்திலே வருத்துவது அவர் கருத்தாமாயினும், இந்தியா தேசம் சாதியபிமான முடையது; அதைப் பரிசுத்தாவி வந்தாலும் மாற்றமுடியாதாதலின், சாணாரை யெல்லாம் ஒருங்கு திரட்டி சேர்த்துவிட்டால் சாணா ரச் சபையென்று கிறிஸ்து சபையை நிந்திப்பார். நிந்திக்கவே வேறு உயர்ந்த சாதியார் ஒருவரும் இச் சபையிலே சேர விரும்பார். இது நீதியன்று. இன்னும் ஒருவர் மலிந்த பண்டத்தை வாங்குவதினும் அரிய பண்டத்தை உயர்ந்த விலை கொடுத்து வாங்கிவைத்தால் தமக்கு ஓர் மகிழ்வும், அதைக்கண்ட பிறருக்கும் விருப்புண்டு என்றதை யுட்கொண்டும், தமிழ்த் தெரியாமல் உடனே ஐரோப்பாவில் இருந்து வந்த பாதிரிமார் தமது கருத்துக்கு ஒப்ப வழுவாதிருக்கும்படிக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/338&oldid=1591309" இலிருந்து மீள்விக்கப்பட்டது