உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் -27

அற்றன்று, அறிவிற் சிறிய விலங்கினங்கள் மட்டுமே துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் விரும்புகின்றன வன்றி, அறிவிற் பெரிய மக்களுந் தேவரும் அவற்றை விரும்பு கின்றிலராய் அறிவு விளக்கத்தையே நாடி நிற்கின்றன ரெனின்; ஒருநாள் முழுதும் மெய் வருந்தப் பாடுபடுகின்ற வர்களும், தமது உழைப்பினாற் பெற்ற பொருளைக் கொண்டு பசிப்பிணியைப் போக்கி இன்புற்றும், காமப்பிணியைப் போக்கத் தம் மனைவியைக் கூடிக் களித்தும் வாழ்ந்து வருகின்றார்கள்; பலவாண்டுகளாகக் கலைஞானங்களை மிக வருந்திக் கற்றுப் பெரும் பொருள் ஈட்டுகின்றவர்களும் தமது பசித்துன்பத்தைப் போக்கித் தம் மனையாளோடு கூடி இன்புற்று வருகின்றார்கள். வேறு இன்னும் எந்தவகையான முயற்சியைச் செய்வர்களைப் பார்த்தாலும், அவர்கள் எல்லாரும் பசி, காமம் என்னும் இவ் இருவகைத் துன்பத்தையும் போக்கி இன்புறும் நோக்கத்திலே உறைத்து நிற்கக் காண் கின்றேமல்லது பிறிதில்லையே. அங்ஙனமன்று, அறிவுடை யார் சிலர் பசி காமம் என்னும் இவ்விரண்டன் பொருட்டாக வன்றி அறிவு நூல்களைக் கற்று அறிவு நிரப்பும் அம் முயற்சியில் மட்டும் உறைத்து நிற்கக் காண்கின்றோமே எனின்; அங்ஙனம் அவர் அறிவு நூற் கல்வியில் முயல் வதூஉம் அந்நூல்களைக் கற்குங் காலத்தும் கற்றறியும் பொ பாருள் நுட்பங்களைத் தேருங்காலத்தும் தம்மகத்தே விளைந்து தம்மை விழுங்கும் பேரின்பப் பேற்றின் பொருட் டாகவே யல்லது வேறில்லையென்பது தெற்றென அறியப் பட்ட

உண்மையேயாகும்.

அற்றேல் அறிவு பெரிதோ மற்று இன்பம் பெரிதோ வனின்; எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடி நிற்கும் இயல்புடையன வென்பதை மேலே விளக்கிக் காட்டின மாதலாலும், அறிவு விளக்கத்தின் பயனெல்லாம் இன்பப் பேறாகவே முடியக் காண்கின்றோமாதலாலும் அறிவினும் இன்பமே பெரியதூஉஞ் சிறந்ததூஉமாமென்பது இனிது பெறப்படும். எனவே, இன்பவழிப் பட்டு நிற்பதாகிய பத்தி மார்க்கமே அறிவின் வழிப்பட்டு நிற்பதாகிய ஞான மார்க்கத் தினுஞ் சிறந்ததா மென்பதுஉம் இது கொண்டு முடிக்கப் படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/47&oldid=1591017" இலிருந்து மீள்விக்கப்பட்டது