உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

6

23

அவ்வாறாயினும் ஞானமும் பத்தியும் ஒன்றையொன்று பிரிந்திராவாய் ஒன்று காரணமாயும் மற்றொன்று அதன் காரியமாயும், ஒன்று அறிவாயும் மற்றையது அனுபவமாயும் பிணைந்து நிற்குந் தன்மையவாய் விளங்கும். இதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கிக் காட்டுவாம். தேனூறிப் பழுத்துக் குலை குலையாய்த் தொங்குங் கனிகளையுடைய ஒரு தேமா மரத்தின் கீழ் ஒருவன் நாடோறும் இருந்தாலும், அவன் அம்மரத்தின் பழம் மிக்க சுவையுடைய வென்றும் அவற்றை உண்பதனால் பசி நீங்கி நலமுண்டா மென்றும் அறிந்திலனாயின், அவன் அங்கிருந்தே பசியால் துன்புற்று இறப்பான்; இனி வழிச் செல்லும் அறிவுடையான் ஒருவன் அப்பழத்தின் அருமை அறிந்து, வேண்டுமட்டும் அவற்றைப் பறித்துப் பசி தீர உண்டு இன்புற்று வாழ்குவன். இவற்றால் அறியாமை யுள்ளவளவும் அதனை யுடையானுக்குத் துன்பமே நிகழும் என்பதூஉம், அது நீங்கி அறிவு நிகழப் பெறுவானுக்கு அவ்வறிவால் இன்பமே விளையும் என்பதூஉம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ள விளங்குகின்றன, வல்லவோ?

அங்ஙனம் அறிவால் இன்பம் உண்டாதலை விளக்கிய வ்வெடுத்துக்காட்டில் தேமாங்கனியின் அருமையை ஒருவன் அறிந்துநின்ற நிலை போல்வதே ஞான மார்க்க மாகும்; அம் மாங்கனியின் அருமையை அறிந்த அளவிலே அதனைச் சுவைத்து மகிழும் இன்பம் பிறவாமல், அதனைப் பறித்துப் பிழிந்து அதன் சாற்றை நாவிலிட்டுச் சுவைத்த பின் மட்டுமே அவ்வின்பந் தோன்றுதல்போல ஞான மார்க்கத் தால் அறியப்பட்ட பொருளை அறிந்த அளவிலே இன்பந் தோன்றாமல் பத்தி மார்க்கத்தால் அனுபவித்துக் காணும் உண்மைக் காட்சியிலேதான் இன்பம் விளையுமா மென்பதும் இனிது புலப்படும். இனி ஒரு பொருளின் அருமையை அறிந் தவன் அதனை அனுபவியாது விட ானாகலின், ஞான மார்க்கத்திற் சென்றவன் பத்தி மார்க்கத்திற் செல்லாதிரான் என்பதுந் துணியப்பட்ட பொருளாம். ஆகவே அறிவின் வழிப்பட்டு நின்ற ஞானமார்க்கம் இன்ப வயப்பட்டு நின்ற பத்தி மார்க்கத்தினைப் பயக்குங் காரணமாய் நிற்கப் பத்தி மார்க்கமானது அதன் காரிய அனுபவ நிலையாய் அதனினுஞ்

னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/48&oldid=1591018" இலிருந்து மீள்விக்கப்பட்டது