உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

❖ ❖ மறைமலையம் - 27

சிறப்புடைத்தாய் விளங்குமென்பது பெறப்பட்டது. இம் முறை சிற்றறிவு சிற்றின்பங்களையுடைய பெத்தான் மாக்களிடத்தும், பேரறிவு பேரின்பங்களை யுடைய முத்தான் மாக்களிடத்தும் பிறழாது காணப் படுவதேயாகும் என்று இவ்வாற்றால் இன்பப் பேறே எல்லா உயிர்களுக்கும் முடிந்த நிலையா யுள்ள தென்பது காட்டப்பட்டது.

அங்ஙனமாயின், சிற்றறிவுடைய உயிர்கள் அவாவும் இன்பத்திற்கும், பேரறிவுடைய மக்களும் முனிவரும் அவாவும் இன்பத்திற்கும் வேறுபாடு என்னயெனின்; இன்பம் அறிவின் காரியமாய்த் தோன்றுவதென முன்னரே விளக்கிக் காட்டின மாகலின், அவ்வின்பம் தனக்குக் காரணமாயுள்ள அறிவின் தரத்திற்கு ஏற்பப் பெரிதாயுஞ் சிறிதாயும் நிலை யுளதாயும் நிலையிலதாயும் பல திறப்பட்டுத் தோன்று மென்பதும் அது காண்டு தெளியப்படும், உயிர்கள் உலகத்துப் பொருள்களின் சேர்க்கையானும், தம்மையொத்த உயிர்களின் சேர்க்கை யானும் இன்பம் எய்தக் காண்கின்றோம். உலகத்துப் பொருள்கள் அறிவில் லாதனவும் நிலையில் லாதனவுமாய்ப் போதலின் அவற்றின் சேர்க்கையாற் பிறக்கும் இன்பமும் நிலையில்லாமல் அழிந்து போதலுடன் தானழிந்தபின் துன்பத்தையும் விளை விக்கின்றது,இனி உயிர்களெல்லாம் சிற்றறிவினவாயும் நிலை யில்லாத உடம்புகளில் மாறி மாறி வருவனவாயும் இருத்தலின் அவற்றின் சேர்க்கையாற்றோன்று மின்பமும் நிலையின்றி அழிதலுடன் பின்னர்த் துன்பத்தையும் வருவிக்கின்றது. என்றும் அழியாது நிலைத்து நிற்கும் பேரின்பத்தையே அடைய வேண்டும் என்னும் உயிர்கள் அப்பேரின்பத்தைத் தருதற்குரிய பேரறிவுப் பொருளை நாடாமல், மின்னல் போலத் தோன்றித் தோன்றிச் சிற்சில நொடியில் மாய்ந்து போகும் சிற்றின்பத்தைத் தந்து பின் துன்பத்தையே பயக்கும் உலகத்துப் பொருள்களையும் சிற்றுயிர்களையும் நாடுதல் தமக்குள்ள சிறிய மயக்கவறிவின் பான்மையினாலன்றோ?

நோக்கத்தையுடைய

ம்

சிற்றறிவால் வருவது சிற்றின்பமும் பேரறிவால் வருவது பேரின்பமும் ஆகும். சிற்றறிவானது தனக்கு எட்டிய சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/49&oldid=1591019" இலிருந்து மீள்விக்கப்பட்டது