உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

25

பொருளையே நாடும்; பேரறிவானது எல்லா அறிவும் எல்லா இன்பமும் நிறைந்த பெரும் பொருளையே நாடும். சிற்றறிவால் நாடப்படும் சிறு பொருட் சேர்க்கையாற் சிற்றின்பமும், பேரறிவால் நாடப்படும் பெரும் பொருட் சேர்க்கையாற் பேரின்பமும் வருதல் இயல்பேயன்றோ? விலங்கினங்களின் அறிவு பகுத்துணர்வோடு கூடாமல், உலகத்துப் பொருள் களை மட்டும்அறிவிக்குங் கருவிகளான மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளோடு இயைந்து நிகழ்தலின், அவை தமக்குப் பசி எடுத்த காலத்து இரைதேடித் தின்று பசி நீங்கி இன்புற்றும் உறங்கியும் சிற்சில நேரங்களில் ஆணும் பெண்ணுமாய் மருவியும் அவ்வள வோடு தமது காலத்தைக் கழித்து விடுகின்றன. இங்ஙனம் விலங்கினங் களின் அறிவு புறப்பொருள்களைப் பற்றிய புற அறிவாய் மிகச் சிறிதாய் இருத்தலின் அச்சிற்றறிவால் அவையடையும் ன்பமும் மிகச் சிறிதாய்க் கழிகின்றது.

இனி மக்களாய்ப் பிறந்த நம்மனோர்க்குள்ள அறிவு புறத்தேயுள்ள உலகத்துப் பொருள்களை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி வாயிலாக அறிவதுடன், அங்ஙனம் அறிந்தவற்றைத் தமது அகத்தே கொண்டுபோய் வைத்து இது நல்லது இது தீயது எனவும், இஃது இதனை ஒக்கும் இஃது இதனை ஒவ்வாது வேறாம் எனவும் பகுத்துணர வல்லதாயும் இருத்தலின், விலங்கினங்களின் அறிவைவிட எத்தனையோ மடங்கு பெரிதான இவ்வகப்புற அறிவால் வரும் இன்பமும் அச்சிற்றுயிர்கள் எய்தும் இன்பத்தினும் எத்தனையோ மடங்கு பெரிதாய்த் திகழ்கின்றது. பசி எடுத்த காலத்து மட்டும் இரைதேட முயன்று, பசி ஒழிந்தபின் வாளாது உறங்கிக் கழியும் விலங்குகள் பலவற்றைப் போல் ஆகாமல், அப்பசித் துன்பத்தை நீக்க முயலும் போதும் வருங் காலத்தை நாடி உழைக்கும் மக்கள் அறிவின் மேன்மையைப் பாருங்கள்! விலங்குகளிற் பெரும்பாலன நாளைக்கு என் செய்வேம் என்னுங் கவலை சிறிதுமே இல்லாதனவாம். மக்களோ நாம் முதுமைவந்த காலத்து வருந்தாது இருந்து உண்ணல் வேண்டுமே என்னும் வருங்கால அறிவுடையராய் இளம்பருவத்தே ஆனமட்டும் முயன்று வேண்டும் பொருளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/50&oldid=1591020" இலிருந்து மீள்விக்கப்பட்டது