உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

❖ • மறைமலையம் - 27

தொகுத்துக் கொள்கின்றார்கள்; அதுமட்டுமேயோ, தமக்கு மட்டுமே ம வேண்டுமென் மன்று பாருள் தொகுத்துக் கொள்ளாமல் தமது இன்பத்திற்கு உதவியாய் நிற்கும் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் நண்பர் முதலாயினார்க்கு வேண்டுமளவும் பொருள் தொகுத்துக் கொள்கின்றார்கள்; அங்ஙனம் பொருள் தொகுக்குமிடத்தும் பலர்க்கும் பயன் படுங் கைத்தொழில் உழவு வாணிகம் முதலிய முயற்சி களிற் புகுந்து தாம் பயன் பெறுதலல்லாமலும் பிறரையும் பயன் பெறுத்து கின்றார்கள்.

L

ரு

இவ்வாறு விரிந்த அறிவு கொண்டு தாம் இன்புறுங் காலத்து அதனாற் பிறர்க்கும் இன்பம் விளைதலால் அவ்வின்பத்தைக் கண்டு மக்களாயினார்க்கு மேலுமேலும் ன்பமே விளையா நிற்கும். “தாமின் புறுவது உலகின் புறக் கண்டு, காமுறுவர் கற்றறிந் தார்” - (குறள் 399) என்ற திரு மொழிப்படி பிறர் அடையும் இன்பத்தைக் கண்டு இங்ஙனந் தாமும் மகிழும் மகிழ்ச்சி விலங்குகளுக்கு L உண்டோ சொல்லுமின்! இன்னும் மக்களிற் கற்றவராயுள்ளோர் ஏனைக் கற்றறிவில்லார் எய்தும் இன்பத்தினும் மிகச் சிறந்த இன்பம் எய்துகின்றார். கல்லாத மாந்தருக்கும் கற்றறிவுடைய நல்லாருக்கும் அகத்தும் புறத்தும் அறிவு நிகழுமாயினும், அவ்வறிவு கற்றவரிடத்து நுணுகி விரிந்து பெருகிப் பேரின்பந் தருதல்போலக் கல்லாதவருக்குத் தர மாட்டா தாகும்; துபற்றியே தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாய னாரும் கல்லாதான் ஒட்பங்கழியநன் றாயினுங், கொள்ளா ரறிவுடை யார்” - (குறள் 404) என்று அருளிச் செய்தனர். பொது அறிவினை யுடையார் மெய், வாய், கண், மூக்கு, செவிகளால் புறப்பொருள்களை ஆய்ந்தறிந்து அறிவு பெருகி மிக்க இன்பம் அடைய மாட்டுவாரல்லர்; விலங்கு களைப் போல் உண்டு உறங்கிக் கலந்து அவ்வளவிலே மகிழ்ந்து ஒழிவர். கல்வியறிவுடை யாரோ உலகத்துப் பொருள்களின் பலவகைத் தோற்றங்களையும் அவற்றின் அரிய அமைவு களையுங் கண்டும், இனிய ஓசைகளையும் இசைப்பாட்டுக் களையுங் கேட்டும், பல வகைப்பட்ட சுவைகளையும் நறுமணத்தையுங் கவர்ந்தும், மெல்லென்ற பொருள்களைத் தொட்டும், வற்றொடு மனவறிவாற் பல L கலைஞான நூல்களை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/51&oldid=1591021" இலிருந்து மீள்விக்கப்பட்டது