உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

27

ஓதியுணர்ந்தும் ஏனைப் பொது அறிவுடையார்க்கு எட்டாத ஓர் அரிய இன்பத்தைப் பெறுவர். கல்வியறி வில்லாதவர் மக்களு ளு ள் விலங்குகளே யாவர்; வ்வுண்மையை உணர்த்துவதற் கன்றோ தமிழ் மறையும் “விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல், கற்றாரோ டேனை யவர்” (குறள் 410) என்று கூறுவதாயிற்று.

னி இத்துணைப் பெரிய கல்வியறிவினை யுடைய வரும் நிலையில்லாத உலகத்துப் பொருள்களையும் நிலை யில்லாத சிற்றுயிர்களையும் அவற்றின் நுட்பங்களையும் முற்ற வுணர்ந்து, அதனாற் பெருகிய சிறப்பறிவாற் சிறப்பாகிய ன்பத்தை அடைகின்றாரென்றாலும், அவரால் ஆராயப் பட்டனவும் நிலையில்லாத சிறு பொருள் களேயாய்ப் போதலின் அவற்றை அறிந்த அக்கற்றோரறிவும் சிறியதாய் அவ்வறிவால் வந்த இன்பமும் சிறியதாய் ஒழிய, அவரைப் பற்றிய அறியாமையும் முற்றும் நீங்காதாய் நிற்க, அவ் வறியாமை வாயிலாக வருந்துன்பமும் அவரைவிட்டு நீங்காமற் பிறவிகடோறும் அவரையும் துன்புறுத்திய படியாகவே தொடர்ந்து வரும். ஆ! கல்வியால் எத்துணை பெரியவராயினும், அவர் உலகத்துப் பொருள்களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியுமே தமதறிவை இயங்க விடுவார்களாயின், அவர் ஏனையோர்க்கு எட்டாத ஒரு சிறந்த இன்பத்தை அடைந்தாலும் அவ்வின் பமுங் கடைசியிற் சிற்றின்பமேயாய் நிலையாது கழியப் பின்னர் அவர் பெருந்துன்ப வயத்தராயே பிறவிகளிற் பட்டு உழலுவர்!

இது பற்றியன்றோ செந்நாப்போதாரும் “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின்” (குறள் - 2) என்று அருளிச் செய்வாராயினர், இனி இக்கற் றோரினும் மேம்பட்ட முனிவரரோ உலகத்துப் பொருள் களின் நிலையாமையினையும் சிற்றுயிர்களின் சிற்றறிவியல்பு களையும் இனிது உணர்ந்து அவற்றின்கட் சிறிதும் பற்றில்லாமல் எல்லாப் பொருள்களினும் பெரிய தாய், உயிர்ப் பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லா வற்றினும் நுண்ணியதாய், எல்லா அறிவுகளினும் மேலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/52&oldid=1591022" இலிருந்து மீள்விக்கப்பட்டது