உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

❖ ❖ மறைமலையம் – 27

தூய பேர் அறிவினை யுடையதாய், இங்ஙனம் பேரறிவு டையதாய் இருத்தலின் அவ் வறிவோடு பேரின்பமும் உட ன் நிகழப் பெறும் பேரின்ப நிலையமாய், என்றும் நிலை பேறாயுள்ள அழியா முழு முதற் பொருளாய் விளங்கா நின்ற ஒப்புயர் வில்லா ஒரு தனித்தலைமைப் பெருங் கடவுளையே அறியும் பேரறிவு கொண்டு அப்பேரறிவோடு ஒருங்கு நிகழும் பேரின்பப் பாற்கடலிற் றிளைத்துப் பேரின்ப வுருவாய் நிலை திரியாது அமர்ந்திருப்பர். இங்ஙனம் முனிவ ரரால் அடையப் பட்ட இன்பமானது எல்லையற்ற பேரின்பக் கடலாய், எல்லா உயிர்களுங் கடைசியாக எய்து தற்குரிய முடிந்த பதமாய் விளங்கும்.

என்று இதுகாறுங் கூறியவாற்றாற் புழுமுதல் முனிவரர் ஈறான எல்லா உயிர்களும் துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத் தையுமே அவாவி முயன்றாலும், அவ்வுயிர்கள் எல்லாம் தத்தமக்கு அறிவு எட்டியவரையிலே உலகத்துப் பொருள் களைப் பற்றியும் தம்மையொத்த சிற்றுயிர்களைப் பற்றியும் எல்லாவற்றிற்கும் மேலான கடவுளைப் பற்றியும் நின்றமை யால், அவ்வுயிர்கள் மாட்டுத் தோன்றிய இன்பமும் பலதிறப் பட்ட தாயிற்று.

னி உலகத்திலுள்ள எல்லா வுயிர்களும்இன்பப் பேற்றினையே முடிந்த பதமாக அவாவுதல் உணர்ந்து, உலகத்திலுள்ள சிறந்த சமயங்கள் எல்லாம் நிலையில்லாத னைச் சிற்றின்பங்களைப் பெறுவதிற் கருத்தூன்றல் ஒழிந்து, நிலையான கடவுளின் பேரின்பத்தைப் பெறுதலென அறிவுறுப்பவாயின. இங்ஙனமே நமது சைவ சமயமும் அறிவுறுத்துதல் சைவ சமயாசாரிய சுவாமிகளான மாணிக்க வாசகப் பெருமான்

வைத்தநிதி பெண்டிர் மக்கள்குலங் கல்வியெனும் பித்த வுலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்

சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த

வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ!

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/53&oldid=1591023" இலிருந்து மீள்விக்கப்பட்டது