உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

❖ ❖ மறைமலையம் – 27

மற்றைச் சில அவரைப் பெரியதிற் பெரியவர் என்னும் பெயரினாலும், இன்னுஞ் சில அவரை ஒளியுரு வினர் என்னும் பெயரினாலும், மற்றும் பல பலவாற்றாலும் வழங்கு கின்றனவே யல்லாமல் அவை அவரை இன்ப வடிவினர் வ என்னும் பெயரால் வழங்குவதைக் காண்டல் அரிதினும் அரிதாம், அரியாமையிற் கிடந்து துன்பத்திற் சுழலும் சிற்றுயிர்களான நாம் அத்துன்பத்தினின்றும் விலகி என்றும் அழியா அவரது பேரின்பத்தைப் பெறுதல் ஒன்றிலே மட்டுங் கருத்துடையோ மாதலால், நமது கருத்துக்கும் நோக்கத்திற்கும் ணக்கமாய் வேண்டப்படாத அவருடைய மற்றத் தன்மை களைப் பேசி எமக்கு ஆவதென்ன? அவர் எல்லாம் வல்லவ ராதலைப் பேசுதலால் எமக்கு என்? அவர் எங்கும் நிறைந்தவர் என்பதனால் நாம் பெற்றதென்? அவர் எல்லாத் தலைமையு முடையவர் என்றுரைத்தலால் எமக்காவ தென்னை? அவர் எல்லாங் கடந்தவரென்று நினைத்தலால் நாம் எய்துவது யாது? அவர் பெரியதிற் பெரியவர் என்று கூறுதலால் நாம் பெற்ற பேறென்ன? அவர் ஒளியுருவினர் என்றும் மற்றும் பல வியல்பினரென்றும் நினைத்தலால் நமக்கு வருவது யாது? நாம் அவர்பாற் பெற வேண்டுவன துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயல்லவோ? இங்ஙனங் கூறுதல் கொண்டு நாம் முற்சொல்லிய பெயர்களால் அவரை வழங்கலாகாதென்று கருதினோம் என எண்ணற்க. அங்ஙனம் அவர் தம் வியத்தகும் யல்புகள் பலவற்றையுங் கூறுதலாற் போந்த இழுக்கு ஒன்று மில்லை என்றாலும், துன்பத்தைப் போக்கி இன்பத்தைத் தரும் இன்பவுருவினர் என்று அவரை வழங்குதலே நாம் கடைத் தேறுவதற்கு வழியாதலால் அப் பெயரிட்டு அழைத் த தலே நமக்கு இன்றியமையாத கடமை யாம். இவ்வரிய பெரிய உண்மையை எம்போன்றார்க்கு அறிவுறுத்துதற் பொருட் டாகவே மாணிக்கவாசகப் பெருமான்,

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின்

வழியடைத் தமுதே

ஊறிநின் றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா

காணவந் தருளாய்

தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப் பெருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/55&oldid=1591025" இலிருந்து மீள்விக்கப்பட்டது