உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

துறையுறை சிவனே

ஈறிலாப் பதங்க ளியாவையுங் கடந்த இன்பமே!

என்னுடை அன்பே!

என்று அருளிச் செய்ததூஉம்,

31

இம்முடிபு முழுதும் ஒருங்கு அனுபவித்துணர்ந்த

திருமூலயோகிகள்,

அன்புஞ் சிவமு மிரண்டடென்ப ரறிவிலார்

அன்பே சிவமாவ தியாரு மறிகிலார்

அன்பே சிவமாவ தியாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே.

என்று அருளிச் செய்ததூஉம் என்க.

ஆத்திகமதக் கொள்கைகள் ஒன்றுக்கும் இணங்காத நாத்திக சமயிகளுங்கூட “எல்லையற்ற அன்பின் உருவே கடவுள்” என்று மொழிந்தால் அதனை உடனே தழுவிக் காள்வர். அஃதெதனாலெனின், எல்லாம் வல்லுதல் எங்கும் நிறைதல் முதலான அவர் தம்மற்றை இயல்புகள் மக்களாகிய நம்மனோர் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும்

எட்டாதனவாகலின், அவ்வறிவுக்கும் அனுபவத்திற்கும் வராதன வெல்லாம் பொய்யென்றுரைக்கும் அந்நாத்திக சமயிகளிடத்து அவற்றைச் சொல்லிக் கடவுள் ஒருவர் உண்டென்று நாட்டுதல் ஒருவாற்றானும் ஏலாததொன்றாம்; அங்ஙனங் கூறுதலை விடுத்து நமதறிவுக்குப் புலனாயும்

நமதனுபவத்திற்குப்

பொருளாயும் விளங்கும் அன்பு அல்லது இன்பத்தின் எல்லையற்ற வடிவே கடவுள் என்று ரைப்பே மாயின், எல்லாவுயிர் கட்கும் அனுபவமா யுள்ள அதனை மறுக்க மாட்டாமையின் அவர் அதற்குடனே

ணங்குவர். இங்ஙனங் கடவுள் உண்டென்பார் ல்லை யென்பாரான எத்திறத்தாரானும் மறுக்கலாகாது தழுவப் படும் முடிந்தவுண்மையாயிது விளங்குதலைத் தெற்றென வுணர்ந்தே

ணர்ந் ே மாணிக்கவாசகப் பெருமானும் திருமூல நாயனாரும் அங்ஙனங் கடவுளை “ஈறிலாப் பதங்களி யாவை யுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே” ம அன்பே" எனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/56&oldid=1591026" இலிருந்து மீள்விக்கப்பட்டது