உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

66

❖ ❖ மறைமலையம் – 27

""

அன்பே சிவமாவது எனவும்

முறையே அருளிச் செய்தனர்கள். சைவ சித்தாந்தத்திற்குப் பிரமாண முதனூ லாகிய சிவஞான போதத்தும்,

அருளுண்டா மீசற் கது சத்தி யன்றே அருளு மவனன்றி யில்லை - அருளின் றவனன்றே யில்லை யருட்கண்ணார் கண்ணுக் கிரவிபோ னிற்குமர னேய்ந்து

என்று அருளே கடவுளாதல் வலியுறுத்துச் சொல்லப் பட்ட மை காண்மின்கள்!

னி

இனி உலகத்தின்கண் உள்ள ஆத்திக சமயங்களுள் ஒன்றேனும் கடவுளை இன்பப் பெயரிட்டு அழைத்திலது என்றது ஒக்கும்; மற்று நமது சைவ சமயம் அவை யெல்லா வற்றினும் மாட்சியுடைத்தாயின், அதன்கட் கடவுளுக்கு இன்பப்பெயரே சிறப்பாக வழங்கல் வேண்டுமாலெனின், அதனை ஒரு சிறிது விளக்குவாம்.

நமது மதத்திற்குச் சைவம் என்னும் பெயர் வந்தது எதனால் என்று ஆய்ந்து பார்க்குங்கால் நமது கொள்கை சிவ சம்பந்தம் உடையதாதல்பற்றியே அப்பெயர் பெறுவதாயிற் றென்னும் உண்மை விளங்கா நிற்கும்; இதனாலன்றோ சிவனருள் பெற்ற சிற்றம்பல நாடிகள்,

தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி

என்று அருளிச் செய்வாராயினர். சிவம் என்னுஞ் சொல்லை வடமொழி என்று எடுப்பினும் தமிழ் மொழி ஈன்றெடுப் பினும், அது மங்கலம், சுகம், பாக்கியம், பேரானந்தம் என்னும் இன்பப் பொருளையல்லாமல் வேறு பொருளைத் தரக் காண்கின்றிலேம்; அது வட மொழியில் இங்ஙனம் ன்பப் பொருளையே தருமாறு நைஷத சரிதம், இரத்தி னாவளி, கிராதார்ச்சுனீயம், இரகு வமிசம் முதலான வட மொழி நூல்களில் அஃது அப்பொருளே தந்து வருதலாற் றெளியப் படும்; அது தமிழிற் செந்நிறமென்றும் செவ்விது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/57&oldid=1591027" இலிருந்து மீள்விக்கப்பட்டது