உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

33

என்றும் பொருள்படும் சிவ செம் என்னும் பகுதிகளோடு ஒற்றுமைப்பட்டு அவ்வின்பமென்னும் பொருளைத் தருமாறு தமிழ்நூற் பயிற்சியால் நன்குணரப்படும். இங்ஙனம் ஆனந்தம், அன்பு, இன்பம் என்னும் பொருளையன்றி வேறு பொருள் தராத சிவம் என்னுஞ் சொல் இன்பவுருவாயே விளங்கும் முழுமுதற் கடவுளுக்கு முதன்மைப் பெயராக வைத்து நமது சைவ சித்தாந்தத்தில் வழங்கப்பட்டு வரும் அருமை பெருமையை என்னென்று கூறுவேம்! யாம் அறிந்த மட்டில் உலகத்தி லுள்ள வேறெந்த மதத்திலும் இங்ஙனங் கடவுள் இன்பப் பெயரால் அழைக்கப்படுதலைக் கண்டி லேம்! சிவம் என்னும் மொழி சொல்லாலும் பொருளாலும் இன்பம் ஒன்றையே குறித்தல் பற்றியன்றோ அருந் தவச் செல்வரான திருமூலர் “அன்பே சிவமாவதியாரும் அறிகிலார்” என்று அவ்வாறு தெளிவுறுத்தி அருளிச் செய்தார்!

6

எல்லையற்ற அன்பின்வடிவே சிவமாயிருத்தல் பற்றி யன்றோ அச்சிவத்தோடு இயைபுற்ற நமது சைவ சமயத்திலே எல்லா வுயிர்களிடத்தும் அன்பு பாராட்டி ஓருயிரையுங் கால்லாது புலான் மறுத்து ஒழுகுவானைச் சைவன் என்று எல்லாரும் அழைக்கின்றார்! வைணவர், புத்தர், கிறித்துவர், மகமதியர் முதலான பிற சமயத்தவர்களிலும் புலால் உண்ணாதவர்கள் 'நாங்கள் புலால் தின்கிறதில்லை. சைவ மாகி விட்டோம்' என்றன்றோ தம்மைச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்கின்றார்கள்! இங்ஙனம் உலக வழக்கானும் நூல் வழக்கானுஞ் சைவம் என்பது உயிர்களிடத்துச் செல்லும் அன்பினையும் கடவுளிடத்துச் செல்லும் அன்பினையும் விளக்கி விளங்கும் அருமை பெருமையினையும், இன்ப வுருவாய் ஒளிரும் முழுமுதற் கடவுளை அவ்வின்பப் பொருளையே தரும் சிவம் என்னுஞ் சொல்லாற் பண்டை காலந்தொட்டு வழங்கிவரும் விழுப்பத்தினையும் நடுநிலை திறம்பாது ஆய்ந்துணரவல்லவர் எவரேனும் சைவ சமயமே ஏனை எல்லாச் சமயங்களிலும் மாட்சி உடைய தென்று கூற முன் வராதிருப்பரோ? அறிவுடையீர் சொல்லு மின்! நாத்திகர் ஆத்திகர் முதலான எல்லா மதத்தவராலும் தழுவப்பாலதாகிய இவ்வரிய பெரிய கொள்கையினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/58&oldid=1591028" இலிருந்து மீள்விக்கப்பட்டது