உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

சிறு

❖ ✰ மறைமலையம் – 27

யுடைய நமது சைவமானது கீழ்ப்பட்ட நிலையிலுள்ள ஒரு மதமாதலின்றி எல்லா மதங்களையுந் தன்னுள் அடக்கித்தான் அவற்றின் மேலாய் விரிந்து திகழும் நிறைந்த இயல்பினை உடையதென்று சொல்லுவதற்கு அறிவுடை யோர் எவரேனுங் கூசுவரோ?

ஐயன்மீர் ஆராய்ந்து சொல்லுமின்! அழியாத பேரின் பத்தைப் பெற வேண்டும் என்னும் விழைவு மிக்க பெரியோ ரெவரேனும் அவ்வின்பப் பொருள்படும் சிவம் என்னுஞ் சால்லால் நம் ஆ ண்ட வனை அழைக்கக் கூசுவரோ? ன்பத்தை வெறுத்துக் கொடுந் துன்பக்கடலில் அமிழ்ந்தி அறியாமையில் உழலும் உயிர்கள் அவரைச் சிவம் என்னும் பெயரால் அழைக்கக் கூசுவராயின் அஃதவர் தீவினைப் பயனாவதன்றி வேறென்ன? இது குறித்தன்றோ திருமூல து நாயனாரும்

சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ வென்றிடத் தேவருமாவர் சிவ சிவ வென்னச் சிவகதி தானே

என்று அத் தீவினையாளர்க்கு இரங்கி அருளிச் செய்தனர்கள். இன்னும் இச்சிவ என்னும் மொழியின் உயர்வை உணர்த்துதற் பொருட்டாகவே, பொருள் வகையால் வேதங்களுட் சிறந்த எசுர்வேதமானது தனது நெஞ்சமாக விளங்கும் சதருத்திரீய மந்திர நடுவிலே இச்சிவ என்னும்இரண்டெழுத் தொரு மொழியைப் போற்றி வைத்துக் காப்பதாயிற்று. இது நிற்க.

இனி உயிர்களுக்குப் பேரின்பத்தை ஊட்டும் அருட் பெருங்கடவுளான நஞ் சிவபெருமான், அவ்வுயிர்களைப் பற்றி வருத்தும் துன்பத்தை முற்றும் ஒழித்தே தனது இன்னருளை வழங்குவனாகலின்,இன்பத்தைத் தருதலோடு துன்பத்தைப் போக்குதலும் அம் முழுமுதற் கடவுளுக்குரிய உதவிச் செய்கையின் இயல்பாம். உயிர்களுக்கு இன்பத்தைத் தந்தருளுங் கட வுள் அவ்வுயிர்களிடத்துத் தொன்று

தொட்டே முனைந்து நிற்கும் துன்பத்தை நீக்கி யல்லது அதனைத் தருதலாகாமையான், அங்ஙனந் துன்பத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/59&oldid=1591029" இலிருந்து மீள்விக்கப்பட்டது