உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

35

போக்கும் அவரது பேருதவிச் செய்கையை மறவாது நினைந்து அவரை அப் அப்பெயரால் அழைத்தலும் நம்மனோர்க்கு இன்றியமையாத கடமையாம். மேலும், அறியாமையில் அகப்பட்டு வருந்தும் நாம் இன்பத்தைப் பெறும் முன் நம்மை இடையறாது வருத்தி வருந் துன்பத்தைப் போக்கிக் கொள்ளவே விருப்ப முற்றிருத்தலால், நமக்கு அவ்வுதவியைச் செய்யும் நம் ஆண்ட வனைத் துன்பத்தை அழிப்பவன் என்று அழைத்தலிலேதான் அவா மிகும். தொழுநோய் கொண்டும் உடல் அழுகி மிக வருந்தும் ஒருவன் முதலில் அந்நோயைத் தீர்க்கும் மருத்து வனையே நாடி நிற்றல் போலவும், ஆற்றின் பெருவெள்ளத் தில் அகப்பட்டு நிலை தடுமாறி அலைப்புண்டு போம் ஒருவன் தன்னை அதனினின்று மெடுத்துக் கரையேற்று வானையே தேடிக்கிடத்தல் போலவும், சுற்றி எரியுந் தீ நடுவே நின்று துடிக்கு மொருவன் தன்னை அத்தீயின்னிறு மீட்பான் உதவியையே விழைந்து அலறுதல் போலவும் ஆணவமல மென்னும் பெரும் பாந்தள் வாயிலகப் பட்டு வருந்தும் மன்னுயிர்களான நாம் நம்மை அதனினின்று விடுவிக்கும் முதல் வன்றன் பேருதவியினையே அவாவி நிற்கின்றேம்; ஆதலால், அன்பர்களே! எல்லாம்வல்ல அம் முதல்வனைத் துன்பந் துடைப்பவன் என்றுஅழைத்தலே நாம் அத்துன்பத்தி னின்று விடுவிக்கப்படுதற்கும், அதனையே விழைந்து நிற்கும் நமது உயிரினியற்கைக்கும் மிக இயைந்த தாகும்.

இனி இத்துணைச் சிறந்த கடவுளின் உதவிச் செய்கையை இனிது விளக்கி அதனை நமது நினைவில் எழுவிக்கும் பெயர்கள் வேறு மதங்களிற் கடவுளுக்குச் சொல்லப் பட்டிருக்கின்றனவா என்று நாம் ஆராய்ந்து பார்த்தமட்டில், அவைகளில் அவை இருக்கக் கண்டிலேம்; அல்லது அவற்றுள் எதிலேனும் அப்பெயர் இருக்குமாயின் அது நமது சைவ சமயமே என்று பாராட்டி அகமகிழ் தற்குரியேம். மற்று நமது சைவ சமயத்தின் கட் கடவுளைத் துன்பந் துடைப்பவன் என்று குறிக்கும் பெயர்கள் உளவோ எனின்; சிவபெருமானுக் குரிய அருமைத் திருப்பெயர்களிற் பல அப்பொருளையே தருவனவாம் என்று அறிமின்கள்! வடமொழி வேதங்களில் மிகப் பழையதான இருக்கு வேதம் எங்கணும் நஞ்சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/60&oldid=1591030" இலிருந்து மீள்விக்கப்பட்டது