உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் - 27

ருமானுக்குப் பயராக எடுத்தாளப்பட்டு வரும் உருத்திரன் என்னும் பெயர் ஒன்றே நாங் கூறுவதன் உண்மையை நாட்டுதற்குப் போதுமான சான்றாகும். உருத்திரன் என்னும் இச்சொல் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் இருளை அறுப்பவன் என்றும் பொருள் படுமென வேதங்களுக்கு பாஷியம் எழுதின சாயனாசாரியாராலே நன்கு விளக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் போலவே அரன் வைத்தியநாதன் என்னுஞ் சொற்களும் துன்பத்தை யழிப்பவன் ஆணவநோயைப் போக்குபவன் எனப் பொருடந்து சிவபெருமானுக்கே பெயர்களாக வழங்கி வருகின்றன, இப்பெயர்களுக்கு ஏற்பவே இருக்குவேத மானது, “பாட்டுக் களுக்குத் தலைவரும் வேள்விகளுக்குத் தலைவரும் நோய் நீக்கும் மருந்துகளை வைத்திருப் பவருமான உருத்திரரி மிருந்து அவரது மங்களகரமான பிரீதியை நாடுகின் றோம்,” என்றும்,

66

ண்டு கால்களும் நான்கு கால்களும் உள்ள எங்கள் பசுக்களுக்கு நலம் உண்டாதற் பொருட்டும், இந்த ஊரிலுள்ள எல்லா உயிர்களும் நன்றாக உணவு ஊட்டப் பட்டு நோயினின்று நீங்கியிருத்தற் பொருட்டும் வீரர்களுக்கு ஆண்டவரும் சுருண் சடைமுடியையுடைய வரும் வலியோருமான உருத்திரருக்கு இந்த வழுத்துரைகளைச் சேர்ப்பிக்கின்றோம்,” என்றும்

66

ருத்திரரே, யாங்கள் செய்யும் வணக்கங்களாலும் தகுதியற்ற எங்கள் வழுத்துரைகளாலும், வலியோரே எங்கள் தாழ்ந்த வழிபாடுகளாலும் உமக்கு நாங்கள் சினத்தை உண்டாக்காதவர்களா யிருக்க வேண்டும். உம்மிடத்திலுள்ள மருந்துகளால் எங்கள் வீரர்களை எழுப்புவித்தருளும். மருத்துவர் எல்லாரினும் நீரே மிகப்பெரிய மருத்துவரென்று கேள்விப்படுகின்றேன்,” என்றும், “நோயை நீக்கும் உருத்திரர் தம் உருத்திர கணங்களோடும் எம்மிடத்துப் பிரீதியுடைய ராய் இருப்பாராக,” என்றும்,

66

'அடியார்க்கு எளியராயிருக்கின்ற நீர் ஆயிரம் மருந்து களை வைத்திருக்கின்றீர்,” என்றும் உருத்திர மூர்த்தியை வழி படும் இடங்களினெல்லாம் அவரை எல்லா நோயும் போக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/61&oldid=1591031" இலிருந்து மீள்விக்கப்பட்டது