உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

37

வைத்தியநாத ரென்றே கிளந்தெடுத்துக் கூறுகின்றது, இங்ஙனம் மிகப் பழையதான இருக்கு வேதங் கூறுமாறு போலவே, இதற்குப் பின் எழுந்த வேதங்களும் உபநிடதங் களும், நம்பெருமானை வைத்தியநாத னென்றே வலியுறுத்திக் கூறா நிற்கின்றன.

இனி இங்ஙனந் துன்பத்தை நீக்குதலும் இன்பத்தைக் கொடுத்தலுமாகிய உதவிச் செயல்கள் இரண்டும் நம் ஆண்டவனிடத்து ஒருங்கு அமைந்து கிடக்கும் பான்மை யினை உணர்த்துதற் பொருட்டாகவே அவ்விருக்கு வேத மானது பத்தாவது மண்டிலத்தில் உருத்திரன் சிவன் என்னும் இவ்விரண்டு அருமைத் திருப்பெயர்களையும் ஒன்று சேர்த்து ஒரு கடவுள் பெயராகவே கூறுவதாயிற்று.

அன்பின் மிக்க எம் அருமை நேசர்களே, புழு முதல் மக்கள் தேவர் ஈறான எல்லாவுயிர்களும் தம்மை இயற்கை யாகவே பிடித்து வருத்தி வருகின்ற அறியாமைத் துன்பத்தை நீக்குவித்துக் கொள்ளல் வேண்டியும், என்றும் அழியாது நிலைபெறும் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டியும் மிக விரும்பி, அங்ஙனம் அவற்றைத் தமக்குச் செய்து தரவல்ல முழுமுதற் கடவுளை வழிபட்டு வருகின்றார்களாதலின், அவ்வுயிர்களுக்கு அவர் வேண்டியவாறே அவர் துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தரும் நிலையில் அருள்கனிந்து விளங்கும் ஆண்டவனை அந்நிலைக்குப் பொருந்தவே உருத்திர னென்றும் சிவனென்றும் அழைத்தலும் வழங்கலும் எத்துணைச் சிறந்தனவாயிருக்கின்றன! இதனால், இதனால், இவ் வுண்மையை முற்றும் உணர்ந்து இவ்வுண்மைக்கு இயையவே ஒழுகும் நமது சைவ சமயமானது, இவ்வுண்மையை உணராத ஏனைச் சமயங்கள் எல்லாவற்றினும் மிக உயர்ந்த மாட்சி யுடைத்தாய்ப் பொலிதல் வெள்ளிடை மலைபோல் விளங்க வில்லையா? உருத்திரன், சிவன் என்னும் இவ்வருமைப் பெயர்களைக் கேட்டவளவிலே இவ்வுண்மைகளை உணரப் பெறாத சிலர் உணரப்பெறாத வை ஒரு மதத்தின் தெய்வத்தைச் சுட்டுதலால் இவை நாம் தழுவற்பாலனவல்ல வென்று விரைந்து கூறுகின்றார்கள்; அந்தோ! இவர்கள் அறியாமை இருந்தவாரென்னை! என்னை! அவர்கள் கூறுமாறு வ்வொரு மதத்திற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/62&oldid=1591032" இலிருந்து மீள்விக்கப்பட்டது