உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் - 27

-

ஒவ்வொரு தெய்வமா இருக்கும்! ஒரே கடவுளன்றோ உள்ளவர்? து,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே

என்று திருமூலரும்

ஒன்றென் றிருதெய்வ முண்டன் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும்

நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே

6

என்று பட்டினத்தடிகளும் வற்புறுத்தி யருளிச் செய்த வாற்றால் இனிது அறியக் கிடக்கின்றதன்றோ? இங்ஙனம் எல்லா மதங்களுக்கும் ஒரே கடவுளே முதல்வராயிருக்க இவ்வுண்மையை மறந்து, உருத்திரன், சிவன் என்னும் பெயர்கள் ஒரு சமயத் தெய்வத்தையே குறிக்கின்றன வென்று கற்றவராகத் தம்மை நினைத்திருப்போர் சிலர் சொல்வது வியப்பினும் வியப்பே! எப்பொருளையுங் கடந்தவர் என்னும் பொருளைத் தரும் 'கடவுள் என்னுஞ் சொல்லையும், ஒளிவடிவினர் என்னும் பொருளைத் தரும் 'தெய்வம்’ என்னுஞ் சொல்லையும், வை போன்ற வேறு வேறு சில சொற்களையும் இறைவனுக்குப் பெயராக வைத்து வழங்கு வதிற் குற்றங் காணாத அக்கற்றவர் சிலர் துன்பத்தை நீக்குபவன் என்னும் பொருளைத் தரும் உருத்திரன் என்னுஞ் சொல்லையும் இன்பவுருவினர் என்னும் பொருளைத் தரும் ‘சிவன்’ என்னுஞ் சொல்லையும் அவ்விறைவற்குப் பெயராக 6 வைத்து வழங்கு வதில் மட்டும் மனங்கோணுதல் அவரது அறிவின் கோணலையே தெரி விப்பதாமன்றி மற்றென்னை? அற்றன்று, கடவுள் தெய்வம் முதலான சொற்கள் எல்லாரானும் பொதுப்பட வழங்கப் படும் பெயர்கள்: உருத்திரன் சிவன் என்னுஞ் சொற்கள் சைவர்களெனப் படும் ஒரு சாராரால் மாத்திரம் வழங்கப் படுவன ஆகலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/63&oldid=1591033" இலிருந்து மீள்விக்கப்பட்டது