உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

39

அவற்றை வழங்காமை பற்றி இழுக் கென்னை யெனின்; உயர்ந்த முழு மாணிக்கம் ஒன்றன் மதிப்பும் ஏற்றமும் அவற்றை அறிந்தார் சிலர்க்கன்றி எல்லார்க்கும் புலப் படாமையின், அம்மாணிக்கத்தை யாம் மதியேம் என் று பேசும் பேதைமாக்கள் சொல்லுக்கும் அக்கற்றவர் சொல்லுக்கும் வேற்றுமை ஏதுங் காண்கிலேம்.

கொடுநோயால் வருந்தும் ஒருவன் அந்நோய் தீர்க்கும் அரிய மருந்தை வைத்திருக்கும் வல்ல மருத்துவர் வந்தால் நீர் தரும் மருந்தின் றன்மையும் உயர்வும் நும்மனோர் சிலர்க்கன்றி னை எல்லார்க்குந் தெரிந்தன அன்மையின் அதனை யான் உண்ணே னென்று மறுத்து வீணே உயிர் துறக்கும் புன்மைக்கும் அக்கற்றவர் தம் பிறவிப் பயனை இழக்குந் தன்மைக்கும் வேறுபாடு சிறிதுங் காண்கிலேம். எல்லாராலுந் தழுவப் பட்டதனையே யாமுந் தழுவுவேம் என்று சொல்லு தலினும் மிக்க அறியாமை வேறொன் றில்லை. அரிய பெரிய வுண்மைகள் அறிவின் மிக்க சிலர்க்கே விளங்கு மல்லாமல், அவை எல்லார்க்கும் விளங்குவனவல்ல. அவ் வுண்மைகள் எல்லாம் எல்லார்க்கும் ஒரு தன்மையவாய் விளங்கிடுமாயின் நம் மக்கட் பரப்பினருட் காணப்படும் இத்தனை வேறு பாடுகளும், இத்தனைமத வேறுபாடுகளும், நடையுடை பாவனை ஒழுக்க வேறுபாடுகளும், பிறவும் வரக் காரண மிலையே. ஆகையால், என் அருமை நேசர்களே, சிலரால் தழுவப்பட்டன வென்று நல்லவற்றைக்கை விடுதலும், பலராற் கொள்ளப்பட்டன வென்று தீயவற்றைக் கைப் பற்றுதலும் அறிவுடையோர்க்குச் சிறிதும் ஆகாதன வாம். மற்று எவரிடத்தே எது காணப்படினும், எவர் எது சொல்லினும் அவ்வவற்றின் றன்மைகளை ஆராய்ந்து நல்லவற்றைக் கைக்கொண்டு நலமுறுத அறிவுடையோர் செயற்பாலதாம் பெருங் கடமையாகும். இதுபற்றியன்றோ நந் தெய்வப்புலவர்,

லே

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று அருளிச் செய்தனர்.

(குறள் 423)

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/64&oldid=1591034" இலிருந்து மீள்விக்கப்பட்டது