உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ 27✰ மறைமலையம் – 27

இங்ஙனம் என்னதாம் சொல்லினுஞ் சொல்லிக் கொள்க. சைவ சமயத்திற் சொல்வன ஒரு சாரனவாயிருத்தலின் யாம் அவற்றைத் தழுவுதற்கு உடன்படே மென்று கூறுவாருள் ராயின், அஃதவர் விருப்பம். கடவுளை இன்பப் பெயரிட்டு அழைக்க வேறெந்தச் சமயத்திலுங் காணேம். சைவம் ஒன்றிலே மட்டுந்தான் அது காணப்படுதலின், யாம் அதனைத் தழுவு வதற்கு ஒருப்படேம், அதற்கு மாறாகக் கடவுளைத் துன்ப வுருவினர் என்றுதான் அழைக்க முந்துவேம் என்று அக்கற்றறிவினர் கூறுவராயின் அஃதவர் விருப்பம்,; துன்பத்திற் கிடந்து உழலவே விரும்பும் அவர் தீவினைக்கு நாம் இரங்குதலே செயற்பால மல்லது வேறென் சயவல்லேம்! எல்லாம் வல்லுதல், எங்கும் நிறைதல், எல்லாங்கடத்தல் முதலான கடவுளின் மற்ற இயல்புகள் உயிர்களாகிய நந்தம் அறிவுக்கும் அனுபவத்திற்குஞ் சிறிதும் அணுகாதனவா யிருத்தலாலும், அவர் எல்லா இன்பமும் அன்பும் அருளும் உடையராய் இருத்தல் ஒன்றே நமக்கு நேர் அனுபவமாயிருத்தலாலும், பேரின்பத்தையே அவாவும் நமக்கு அப்பேரின்பத்தை அருளும் இன்பவுருவினரான அவர் நமது ஆணவ மலத் துன்பத்தை முதலிற்றுடைத் தருளும் பேருதவிச் செய்கை யுடையராயிருத்த லாலும் அவர்தம் விளக்கமான அவ்வரும் பெருந்தன்மைகளை வாழ்த்தியும் நினைந்தும் வழுத்தியும் பேறு பெருதற்குரிய நாம் அவற்றை இடையறாது நம் நினைவில் எழுப்புவிக்கும் உருத்திரன் சிவன் என்னும் பெயர்களால் அவரை வழங்கக் கடவேம் என்றும், ங்ஙனம் வழங்கும் அரிய பரிய வுண்மை சமயத்திலன்றி வேறெதினுங் காணப் படாமையால் ஏனை எல்லாச் சமயங்களினும் மாட்சியுடைத்தென ணரப்பெற்றேம் என்றும் எல்லாரும் உறுதிகொண்டு அகமகிழல் வேண்டும். இது நிற்க,

சைவ

துவே

இனி உயிர்களின் துன்பத்தைத் துடைத்து இன்பத்தை அருளும் இன்பவுருவினராய் நிற்குங் கடவுளின் உண்மைத் தன்மை எல்லா மதத்தவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/65&oldid=1591035" இலிருந்து மீள்விக்கப்பட்டது