உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

41

தொன்றாயினும், அது சைவ சமயத்திற்கே உரிய உரிமைப் பெரும் பொருளாய் நிலை பெறுமென்பதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். உயிர்களுக்கெல்லாம் துன்பத்தைப் போக்கும் முதல்வர் தாம் துன்பமில்லாதவராய் இருப்ப ரென்பதூஉம், துன்ப நீங்கிய வுயிர்கட்குப் பேரின்பத்தை அருளுமவர் தாம் பேரின்ப வுருவினராயே வயங்குவ ரன்பதூஉம் அறிவுை அறிவுடையார்க்கெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கிக் கிடப்பவும் அவற்றைத் தெளியவுணர்ந்து நிலைப்படுத்திக் கொள்ள மாட்டாத மற்றை மதத்தவருள் ஒரு சாரார் தமது கடவுள் தாயின் கருப்பையுட் டங்கித் தங்கிப் பிறந்து பிறந்து பலவகை அவதாரங்கள் எடுக்குமெனவும், அங்ஙனம் அவதாரங்கள் எடுத்து உழலுங் காலத்துத் தாய் தந்தையர் உறவினர் பகைவ ரால் துன்புறுத்தப் பட்டும், மனைவியைப் பறிகொடுத்தும், மக்களை இழந்தும், மாற்றாரோடு போராடியும் ஒருவன் சால்வழிப்பட்டுத் தனக்குப் பகைவன் அல்லாதவனைக் கொன்று அழிவழக்குப் பேசியும், தன் மனைவியைக் காட்டகத்து ஏவியும், ஒருவன் கைப்படையால் அடிபட்டு இறந்தும் இங்ஙனமெல்லாந் துன்புற்று வருந்தும் எனவுங் கூறுவர்; இங்ஙனங் கூறுமிவர் இன்ப வுருவினராய் விளங்குங் கடவுளை அறிந்தாராவரோ சொல்லுமின்!

இனி மற்றை ஒருசாரார் தமது கடவுள் இன்னதென்று சொல்லப்படாதவாறு தன்னிடத்துத் தோன்றிய மாயையாற் கட்டப்பட்டுத் தன்னை மறந்து அறிவில்லாத சிறு சிறு பொ ள்களாயும் சிற்றறிவுடைய உயிர்களாயும் மாறிப் பிறப்பிறப்புத் துன்பங்களில் அகப்பட்டு சுழலுமெனக் கூறாநிற்பர். இவ்வாறு கூறுமிவர் ஒரு காலத்தும் நிலை தெரியாது எல்லையற்ற பேரின்ப வுருவினனாயே விளங்கும் முதல்வனைக் கண்டாராவரோ சொல்லுமின்! இங்ஙனமே தமது கடவுளருக்குத் துன்ப நுகர்ச்சியைக் கற்பிக்கும் ஏனை எல்லாச் சமயங்களும் இப்போது நாம் வகுத்துச் சொல்லிய இவ்விரண்டு கூற்றுள்ளே அடங்குமாதலின், அவ்வொவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/66&oldid=1591036" இலிருந்து மீள்விக்கப்பட்டது