உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் – 27

மயங்கி

வொரு சமயங்களுந் தாந் தாம் தனித்தனியே தமது கடவுளருக்கு ஏற்றிச் சொல்லும் துன்ப நுகர்ச்சியை விரித்துக் கூறாது விடுகின்றேம். இப்புறச்சமயிகள் தங்கடவுளருக்குச் சொல்லும் துன்ப நிகழ்ச்சிகளைக் கொண்டே அவர்களுள் யாரும் எல்லை யற்ற இன்ப வுருவினராய்ப் பொலியும் முழுமுதற் கடவுளின் ளின் உண்மைத் உண்மைத் தன்மையை உணர்ந்தார் அல்ல ரென்பதூஉம் அவர்களாற் கடவுளராக வணங்கப்படுபவர்கள் ஒரு காலத்து நம்மைப் போற் சிற்றறிவு உடைய உயிர்களாய் உயிர்களாய் இருந்தவர்களே யாவரென்பதூஉம் திண்ணமாய் உணரப் பெறுகின்றேம், ஆகவே, என் அருமை நேசர்களே, நமது சைவ சமயம் ஒன்றே கடவுள் தாம் துன்பமில்லாதவராய் உயிர்களின் துன்பத்தைப் போக்கித் தாம் என்றும் எல்லையற்ற ன்பவுருவினராய் விளங்கி உயிர்களுக்குப் பேரின்பத்தை அருளும் இயல்பின ரென்னும் உண்மையை உணர்ந்த தாயிற்று; இவ் வுண்மை சைவ சமய நூல்களெங்கும் பிறழாமல் வலியுறுத்தப்பட்டிருத்தலையும் சிவபெரு மானுக்குப் பிறப்பு இறப்புத் துன்பங்கள் யாண்டுஞ் சொல்லப் படாமையினையும்

எல்லார் பிறப்பு மிறப்புமியற் பாவலர்தஞ்

சொல்லாற் றெளிந்தேம்நஞ் சோணேசர் - இல்லிற் பிறந்தகதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண் டிறந்தகதை யுங்கேட்டி லேம்

என்றும்,

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகியாங்கே

மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றெத்தெய்வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்குமேல் வினையுஞ் செய்யும் ஆதலா னிவையிலாதா னறிந்தருள் செய்வ னன்றே

னி

என்றும் போந்த அருமைத் திருமொழிகளால் துணர்ந்து களிப்பேமாக. எனவே, கடவுள் இன்பவுருவினர் உயிர்களின் துன்பத்தைத் துடைப்பவர் என்னும் உண்மை சைவ சமயம் ஒன்றானேமட்டுங் காணப்பட்டு அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/67&oldid=1591037" இலிருந்து மீள்விக்கப்பட்டது